"சோலியே" முடிஞ்சிருக்கும்.. வந்த அம்பை திருப்பி அனுப்பிய எடப்பாடி.. நொறுங்கிய பாஜக? கலங்கும் சசிகலா?
சென்னை: சசிகலா - ஓ பன்னீர்செல்வம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று டெல்லி பாஜக நினைத்து கொண்டு இருந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பாஜகவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது என்ன மெசேஜ்?
அதிமுகவில் தொடக்கத்தில் இருந்தே ஒற்றை தலைமையை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட போது அதை பிரதமர் மோடி வாழ்த்தவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்தவில்லை.
நயினார் நாகேந்திரன் தவிர இதை பற்றி ஒருவருமே பாஜகவில் பேசவில்லை.எடப்பாடி தலைவர் ஆனதற்கு அமித் ஷா போன்றவர்களும் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

நெருக்கம்
அதுமட்டுமின்றி ஓ பன்னீர்செல்வத்தை விமான நிலையில் மோடி சந்தித்தது, டெல்லியில் மோடி - ரவீந்திரநாத் - ஓபிஎஸ் ஆகியோர் நெருக்கமாக இருந்தது என்று எடப்பாடிக்கு எதிராக டெல்லி பாஜக பல சிக்னல்களை கொடுத்தது என்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. அதோடு சமீப நாட்களாக சசிகலாவின் பல்வேறு மூவ்களுக்கு பின் டெல்லி கொடுக்கும் முழு சப்போர்ட் உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவில் ஒற்றை தலைமை இருப்பதை பாஜக விரும்பவில்லை.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை அதிமுகவில் வந்தால் அக்கட்சி வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளன. அதுவே பல தலைவர்கள் மோதிக்கொண்டு இருந்தால் கட்சியால் தனிப்பட்ட வளர்ச்சியை அடைய முடியாது. இதை பயன்படுத்தி பாஜக வளர்ச்சி அடைய முடியும். பாஜக எதிர்க்கட்சியாக உருவாக முடியும் என்று அக்கட்சி நம்புகிறதாம். இதனால்தான் எடப்பாடிக்கு டெல்லி தரப்பில் இருந்து இத்தனை நாட்களாக போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி என்ன சொன்னார்?
இந்த நிலையில் தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளாராம். டெல்லியில் உள்ள தனக்கு நெருக்கமான பாஜக நிர்வாகி மூலம் இந்த தகவலை தெரிவித்து உள்ளாராம். அதில்.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை காரணமாக சசிகலாவிற்கு எதிராக அதிமுகவினர் மனநிலை உள்ளது. ஜெயலலிதாவை சசிகலா ஏமாற்றவிட்டதாக அதிமுகவினர் அதிருப்தியில் இருக்கிறார்.

அதிருப்தி
இப்படிப்பட்ட நேரத்தில் சசிகலாவை அதிமுகவில் கொண்டு வந்தால் அது அதிமுகவிற்கும் நஷ்டம். அதிமுகவை நம்பி இருக்கும் பாஜகவிற்கு நஷ்டம். லோக்சபா 2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில், சசிகலா அதிமுகவில் இருக்க கூடாது. இல்லையென்றால் இரண்டு கட்சிகளுக்கும் அந்த தேர்தலில் அதிமுகவின் உண்மை தொண்டர்களே எதிராக திரும்பி விடுவார்கள்.

தூத்துக்குடி
தூத்துக்குடி அறிக்கையில் என் மீது நேரடி குற்றச்சாட்டு இல்லை. ஆனால் ஆறுமுகசாமி அறிக்கையில் சசிகலா நேரடியாக்கம் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். அதனால் அவரை அதிமுக பக்கமே சேர்க்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். வெறுமனே இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று மட்டும் சொல்லி வையுங்கள்.

அறிக்கை
அறிக்கை பற்றி எதையும் முழுமையாக பேச வேண்டாம். யாருக்கும் சப்போர்ட் செய்ய வேண்டாம். பின்னர் மாற்றத்தை பார்த்துக்கொள்ளலாம் என்றும் மட்டும் தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு டெல்லி வட்டாரம் உத்தரவிட்டு உள்ளதாம். எடப்பாடியை அடக்க சசிகலாவை பயன்படுத்தலாம் என்ற பாஜகவின் பிளானும் இதனால் தற்போது முடங்கி உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா மரண விசாரணையில் சசிகலா நோக்கி வந்த அம்பை அப்படியே எடப்பாடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உள்ளார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications