"இந்த" தங்கத்தை அப்படியே அள்ளி சாப்பிடலாம்.. உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன! இதுல இவ்வளவு இருக்கா
சென்னை: தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக பல்வேறு வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், நம்மில் சிலருக்கு மட்டுமே சாப்பிடக்கூடிய தங்கம் பற்றித் தெரியும். அதென்ன சாப்பிடும் தங்கம்.. இதனால் உடலுக்கு என்ன லாபம் என்பவை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கம் முதலே டிரம்ப் செய்த பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களால் முடிந்த வரை தங்கத்தில் பணத்தைப் போட்டு வருகிறார்கள்.

சாப்பிடக்கூடிய தங்கம்
தங்கம் நகை குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் edible gold பற்றி பலருக்கும் தெரியாது. பெயரில் இருப்பது போலவே இது சாப்பிடக்கூடிய தங்கம்.. பொதுமக்கள் சாப்பிடக்கூடிய ஒரு தனித்துவமான தங்க வகை இதுவாகும். தங்க இலை, தங்கத் தூள் மற்றும் தங்கத் தகடுகள் என பல்வேறு வகைகளில் இது இருக்கும். இனிப்பு, இறைச்சி உள்ளிட்ட சில வகை உணவுகளில் இவை பயன்படுத்தப்படும். இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணக்கூடிய தங்கம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கிய சமையல் கலைஞர்கள், "ஒரு சிறிய தங்கத்தை எடுத்து அதை அடித்து அடித்து மெல்லிய தங்கத் தாள்களை உருவாக்குவார்கள். அதேபோல தங்கத்தை இழுத்து அந்த நார்கள் உருவாக்கப்படும். அதை பவுடராகவும் செய்வார்கள். இப்படி சிறிய அளவு தங்கத்தை எடுத்து தேவைக்கு ஏற்ப உருவாக்குவார்கள்" என்றார்.
தங்கம் சேர்க்கப்படுவது ஏன்!
பண்டைக் காலத்தில் தங்கத்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக நம்பப்பட்டது. இருப்பினும், நவீனக் கால மருத்துவ ஆய்வில் அதுபோல எந்தவொரு நன்மையும் உடலுக்குக் கிடைப்பதில்லை எனத் தெரிய வந்துள்ளது. பிறகு ஏன் தங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். தங்கம் வழங்கும்போது அது மிகவும் விலை உயர்வானது என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அதிக விலைக்கும் விற்க முடியும். இதுவே பிரதான காரணமாகும்.
மேலும், தங்கத்தைச் சேர்ப்பதால் கூடுதலாக எந்தவொரு சுவையும் சேராது. உணவை ஆடம்பரமாகக் காட்டுவதைத் தங்கத்தைச் சேர்ப்பதால் எந்தவொரு பயனும் இல்லை என்கிறார்கள். அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கத்தைச் சேர்ப்பதால் டேஸ்ட் மாறாது.. உடலுக்கும் நன்மைகளைத் தராது.. வெறுமன ஆடம்பரத்திற்கு மட்டுமே தங்கம் சேர்க்கப்படுகிறது.
உடலில் என்ன நடக்கும்
உணவுகளில் சேர்க்கப்படும் தங்கம் 99.9% தூய 24 காரட் தங்கம். இது சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் நமது செரிமான அமைப்பால் தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களைச் செரிக்க முடியாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றைக் குறைந்த அளவிலேயே நாம் எடுத்துக் கொள்வோம் என்பதால் எந்தவொரு தீங்கும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பிரச்சினை இல்லை
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இது கிட்டத்தட்ட ஒரு சிறிய நகையை தெரியாமல் விழுங்கிவிடுவது போல தான்.. ஆனால் உண்ணக்கூடிய தங்கத் துகள்களின் அளவு மிகச் சிறியது.. இதை நானோஸ்கேலில் மட்டுமே அளவிட முடியும். எனவே, இது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. உண்ணக்கூடிய தங்கத்திற்கு ஏதேனும் நன்மைகள் உள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். இது உடலுக்கு ஊட்டச்சத்து எதையும் கொடுப்பதில்லை.
தங்கம் செயலற்ற ஒரு உலோகம். அது தூய்மையாக இருக்கும் வரை உங்கள் உடல் அதை உடைக்க முடியாது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் தங்கத்தை உட்கொள்ளும்போது, அது அப்படியே வெளியேறும். அதை ஒரு கழிவுப் பொருளாகக் கருதி, உடல் செரிமான பாதை வழியாக வெளியேற்றும்" என்கிறார்கள்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications