Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜகவில் சேருங்க.." செந்தில் பாலாஜியிடம் ED கேட்டதாக சொன்ன கபில் சிபல்! அமலாக்க துறை ரியாக்ஷன் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று கபில் சிபல் சில பரபர வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு அமலாக்கத் துறை அளித்த பதில் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.

What is Enforcement directorate response for Kapil sibals Senthil Balaji BJP joining remark

இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல களேபரங்கள் அரங்கேறின. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி: அன்றிரவு இரவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். மேலும், அமலாக்கத் துறையினர் அவரை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் சில பரபர வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முந்தையது என்ற சொன்ன கபில் சிபல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கபில் சிபல்: மேலும், கடந்த 9 ஆண்டுகளில் செந்தில் பாலாஜி வருமான வரியைத் தாக்கல் செய்துள்ள நிலையில், சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் இருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை என்றும் அரசு வேலைக்காக யாரும் செந்தில் பாலாஜியிடம் நேரடியாகப் பணம் தரவில்லை என்றும் வாதிட்டார்.

அதன் பிறகு கபில் சிபல் நீதிமன்றத்தில் சொன்னது தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அதாவது விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம், "நீங்கள் ஏன் பாஜகவில் சேரக் கூடாது" என்று அமலாக்கத் துறை கேட்டதாகப் பரபர வாதத்தை கபில் சிபல் முன்வைத்தார். இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இதற்கு நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அமலாக்க துறை: அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இது முழுக்க முழுக்க அப்பட்டமான பொய். எந்த சமயத்திலும் அமலாக்கத் துறையில் இருந்து யாரும் அவரிடம் இப்படிக் கேட்கவில்லை.. செந்தில் பாலாஜி இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. வேறு எந்தவொரு வலுவான வாதங்களும் இல்லாத நிலையில், எப்படியாவது ஜாமீன் பெற்றாக வேண்டும் என்பதற்காக இதுபோல பொய்யான வாதங்களைச் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர்" என்று கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+