100% ரிசல்ட் காட்டும்.. அது என்ன "ஃபேக் பிட்னஸ்" ஊசி? சேத்தன் சொன்ன சீக்ரெட்! இந்திய அணிக்கு சிக்கல்
கேப்டன் பதவி பெறுவதற்கு முன் ஹர்திக் பாண்டியா தனது வீட்டிலேயே தவமாக தவம் கிடந்தது பற்றியும் சேத்தன் சர்மா பேசி இருக்கிறார்.
சென்னை: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா கொளுத்தி போட்ட தீ இந்திய அணிக்குள் காட்டு தீயாக பரவ தொடங்கி உள்ளது. முக்கியமாக இந்திய வீரர்கள் ஊசி போட்டுக்கொள்வதாக இவர் சொன்னது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் கோலி - கங்குலி இடையே இருந்த மோதல் பற்றி சேத்தன் சர்மா பேசி இருக்கிறார்.
அதேபோல் கோலி - ரோஹித் சர்மா இடையே இருக்கும் ஈகோ மோதல் பற்றியும் பேசி இருக்கிறார். இது போக கேப்டன் பதவி பெறுவதற்கு முன் ஹர்திக் பாண்டியா தனது வீட்டிலேயே தவமாக தவம் கிடந்தது பற்றியும் சேத்தன் சர்மா பேசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?
கோலி - கங்குலி இடையிலான மோதல் பற்றி பேசிய சேத்தன் சர்மா, இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடையே மோதல்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு இடையில் ஈகோ இருக்கிறது. இரண்டு வீரர்களுமே பெரிய வீரர்கள். அதனால் இவர்களுக்கு ஈகோ உள்ளது. அவர்கள் இருவருமே பெரிய ஸ்டார்கள் போல. அமிதாப் பச்சன், தர்மேந்திரா இடையே ஈகோ இருந்தது போல இவர்கள் இடையே ஈகோ இருந்தது. கங்குலி ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக எல்லாம் செயல்படவில்லை. ஆனால் அவர் கோலியை விரும்பவில்லை. கோலியை கங்குலி எப்போதுமே விரும்பியது இல்லை, என்று கூறி உள்ளார்.

ஊக்க மருந்து?
இது போக வீரர்கள் ஊசி போடுவது பற்றி பேசி உள்ள அவர், இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள். இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள். அவர்கள் வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்கு மருந்து போல ஆகிவிடும்.

பும்ரா?
இன்னொரு பக்கம் வீரர்கள் ஊசி போடுவது பற்றி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பும்ரா முழு பிட்னஸில் இல்லை. அவரால் சரியாக வளையாட முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு காயம் உள்ளது. சில வீரர்கள் ஊசி போட்டுவிட்டு மருந்து எடுத்துக்கொள்கிறார்கள், என்று சேத்தன் சர்மா இந்த ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவித்துள்ளார். இதில் அவர் "ஃபேக் பிட்னஸ்" ஊசி என்ற பதத்தை பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுக்க சில போட்டிகளில் தகுதி சுற்றில் வாய்ப்பு பெற இது போன்ற ஊசிகளை வீரர்கள் பயன்படுத்துவது உண்டு. இது ஊக்க மருந்து கிடையாது.

சூப்பர் பவர்
சூப்பர் பவர் எதையும் கொடுக்காது. ஆனால் உங்களை சுறுசுறுப்பாக இது மாற்றும். முக்கியமாக இது வலி நிவாரணி போல செயல்படாது. உதாரணமாக பாடி பில்டர்கள் சிந்தால் என்ற மருந்தை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் போது அவர்களின் உடல் இன்னும் கொஞ்சம் பெரிதாக காட்டும். அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் சோர்வை நீக்கி, வேகமாக செயல்பட சில ஊசிகளை பயன்படுத்தி உள்ளனர் என்பது சேத்தன் சர்மாவின் பேச்சு மூலம் தெரிய வந்துள்ளது.

100%
இதன் மூலம் உடலில் காயம் இருந்தாலும், 80 சதவிகிதம் பிட்னஸ் இருந்தாலும் கூட 100 சதவிகிதம் பிட்னஸ் இருப்பதாக காட்டிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஊக்க மருந்து சோதனையில் மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தான் இந்திய வீரர்கள் பயன்படுத்துவதாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிசி என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications