Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபார்முலா 4 கார் ரேஸ் என்றால் என்ன! "மின்னல் வேகம், அதீத துல்லியம்!" சென்னை ரேஸில் இவ்வளவு இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்முலா 4 கார் ரேஸுக்கு இப்போது சென்னை ரெடியாகிவிட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் பார்முலா 4 போட்டிகள் நடக்கும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளன. சென்னைவாசிகள் இந்த ரேஸுக்கு தயாராகும் நிலையில், இந்த பார்முலா 4 கார் பந்தயம் என்றால் என்ன.. சர்வதேச அளவில் இதற்கு ஆர்வம் ஏன் என்பது குறித்து நாம் பார்க்காலம்.

சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று இரண்டு நாட்கள் பார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. தீவுத்திடலைச் சுற்றி இதற்கான ரேஸ் டிராக்கும் இப்போது தயார் நிலையில் இருக்கிறது.

formula 4 race formula 4 race chennai chennai 4

ஆசியாவின் முதல் இரவு நேர ரேஸாக இது நடக்க உள்ளது. சென்னைவாசிகள் இந்த ரேஸுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த பார்முலா 4 ரேஸ் என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்ப்போம்.

பார்முலா 4 என்றால் என்ன: மோட்டர் ஸ்போர்ட்டில் முக்கியமான ஒன்று தான் இந்த ஃபார்முலா 4 ரேஸ்.. கார் ரேஸில் உச்சபட்ச ரேஸாக கருதப்படும் ஃபார்முலா 1 ரேஸுக்கு முதல்படி என்றும் சொல்லலாம். கோ கார்டிங்கிற்கு பிறகு சீரியஸாக கார் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்புவோர் முதலில் இந்த ஃபார்முலா 4ஐ தான் தேர்ந்தெடுப்பார்கள். கோ-கார்டிங் மற்றும் ஃபார்முலா கார் பந்தயங்களுக்கு இடையே உள்ள கேப்பை பூர்த்தி செய்யவே இந்த ஃபார்முலா 4 வடிவமைக்கப்பட்டது.

சிறப்பு கார்கள்: பார்முலா 4 ரேஸில் பொதுவாக இலகுரக 1.4L முதல் 2.0L வரையிலான எஞ்சின்களை கொண்ட ஓபன் வீல் கார்கள் பயன்படுத்தப்படும். இந்த பார்முலா 4 கார்கள் 160-180 ஹார்ஸ் பவர் கொண்டதாக இருக்கும். கார் லைட் வெயிட்டாக இருக்க கார்பன் ஃபைபரால் காரில் செய்திருப்பார்கள். அதிவேகமாகச் செல்ல ஏதுவாக ஏரோடைனமிக் அம்சங்களை இது கொண்டு இருக்கும். மேலும், இதற்குப் பயன்படுத்தப்படும் டயர்கள் கூட அதிவேகத்தில் சென்றாலும் நீட்டித்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் நடக்கும் ரோஸுக்கு இத்தாலி மற்றும் பிரான்சில் இருந்து பிரத்தியேக கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ரேஸில் அல்பைன் (Alpine) 1.3L டர்போ என்ஜின் கொண்ட Mygale F4 Gen 2 கார்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் மட்டுமே அமரக்கூடிய இந்த கார்கள் அதிகபட்சம் மணிக்கு 210 கிமீ வேகத்தை எட்டும். மேலும், டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பார்முலா 1 கார்களில் இருப்பதைப் போல ஹாலோ சேஃப்டி அம்சமும் இதில் இருக்கிறது. மேலும், முழுக்க முழுக்க கார்பன் பாடிவொர்க்கையும் கொண்டதாக இது இருக்கிறது..

சர்வதேச டிரைவர்கள் ஆர்வம் ஏன்: ரேஸை பொறுத்தவரை பார்முலா 1 தான் உச்சபட்ச ரேஸாக கருதப்படுகிறது. நமது நரேன் கார்த்திகேயன் பார்முலா 1 டிரைவராக இருந்தவர். அந்த பார்முலா 1 ரேஸுக்கு தகுதி பெற பார்முலா 4 முக்கிய படிக்கல்லாக இருக்கிறது. பார்முலா 4 ரேஸ் டிரைவராக ஒருவர் தகுதி பெற ஒருவர் 3 ஆண்டுகளில் 40 சூப்பர் லைசன்ஸ் புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். எஃப்.ஐ.ஏ அனுமதியுடன் நடத்தப்படும் போட்டிகளுக்கு சூப்பர் லைசன்ஸ் புள்ளி கிடைக்கும் என்பதாலும் டிரைவர்களில் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவார்கள்.

சென்னையில் நடக்கும் இந்த பார்முலா 4 ரேஸ் மூலமாகவும் டிரைவர்களுக்கு இந்த சூப்பர் லைசன்ஸ் புள்ளி கிடைக்கும். இன்று ஃபார்முலா 1 ரேஸை கலக்கிக் கொண்டு இருக்கும் லாண்டோ நோரிஸ் (மெக்லாரன் அணி), ஜார்ஜ் ரஸ்ஸல் (மெர்சிடிஸ் அணி), சார்லஸ் லெக்லெர்க் (ஃபெராரி அணி) என பலரும் இந்த பார்முலா 4இல் தான் தனது ரேஸிங் வாழ்க்கையைத் தொடக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூட் என்ன: சென்னையில் நடக்கும் ரேஸை பொறுத்தவரை இது டிராக் மிகச் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். தீவுத்திடலைச் சுற்றி கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என வழியாக மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+