9.51க்கே டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக குடிமகன்கள் புகார்.. விடிய விடிய மதுவிற்பனை நடப்பதாக புகார்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 9.51க்கே மூடப்படுவதாக அந்த பகுதி குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கள்ளத்தனமாக பார்களில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இதேபோல் திண்டுக்கலில் பூட்டிய கடையை திறந்து மது விற்பனை நடப்பதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.
திண்டுக்கல் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் நந்தவனம் சாலை பகுதியில் இயங்கி வரும் 3130 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடையில் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடப்பட்ட பிறகு அருகில் உள்ள கதவு வழியாக தொடர்ந்து மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்ட போதும் அசராது கள்ளச் சந்தையில் மதுவிற்கும் மாபியாக்கள் பூட்டிய கடையை திறந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை எடுத்து பக்கத்தில் உள்ள அறைக்கு கொண்டு மது விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

இது ஒருபுறம் எனில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடைகளை 10 மணிக்கு அடைப்பதற்கு பதில் 9.51க்கு அடைத்துவிட்டு கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக குடிமகன்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த பகுதியில் போலீசார் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பதை தடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் அந்த பகுதியை குடிமகன்கள் பகலிலேயே திறந்தவெளி பார் போல் பயன்படுத்துவதால், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதேபோல் கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், இந்த விவகாரத்தில் பெயரளவில் தான் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பாட்டிலை திரும்ப ஒப்படைப்பதற்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு வழக்கம் போல் கூடுதலாக 10 ரூபாய் என 20 ரூபாய் வரை டாஸ்மாக் கடைகளில் வசூலிப்பதாகவும், யாராவது பிரச்சனை செய்து வீடியோ எடுத்தால், அவர்களுக்கு மட்டும் சில நேரங்களில் 10 ரூபாய் திரும்ப தரப்படுவதாகவும் சில குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி? -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications