Exclusive திமுகவுடன் நெருங்கும் பாஜக.. உக்கிரமடையும் அண்ணாமலை - எடப்பாடி சண்டை.. என்ன நடக்கிறது?
சென்னை: பாஜக - அதிமுக இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது ஒருபுறம், பாஜகவுடன் திமுக நெருங்கி வருவதாக விமர்சிக்கப்படுவது மறுபுறம் என தமிழக அரசியல் களம் புரியாத புதிராக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக அரசியல் நடப்புகள் பற்றி ஒன் இந்தியா தமிழுடன் அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
கேள்வி: அதிமுக - பாஜக இடையே தொடர்ச்சியாக மோதல் அதிகரித்துக்கொண்டே செல்ல பின்னணி காரணம் என்னவாக இருக்கும்?

மணி: அண்ணாமலை தொடர்ந்து தனது இருப்பை காட்டிக்கொள்ள நினைக்கிறார். தமிழக பாஜகவில் 90 சதவீதம் பேர் இதனை விரும்பவில்லை. மாநிலத்தில் ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசினால் தான் திமுகவை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் பாஜகவுக்கு அழகு. மாறாக எதிர்க்கட்சியை பழைய கதையை எல்லாம் தோண்டி விமர்சிப்பது வீண் வேலை. அண்ணாமலைக்கு அரசியல் செய்வதற்கு வேறு எதுவும் இல்லாமல் அதிமுக மீது பாய்ந்து பிறாண்டுகிறார். கூட்டணி இனி அமைந்துவிடக் கூடாது என முயற்சிக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை: அண்னாமலைக்கு தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் ஆர்வமில்லை என்றே தெரிகிறது. இன்னும் 10 ஆண்டு காலத்துக்கு பாஜக இங்கு தலையெடுக்க முடியாது என்பதால் தாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, முடிந்தவரை கலைத்து விடுவோம் என்ற விரக்தியில் செய்து கொண்டிருக்கிறார். அரசியலில் அவருக்கு பெரிய குறிக்கோள் இல்லை என்றே தெரிகிறது. இப்போது இருக்கும் பதவியிலும் நீடிக்க விருப்பமில்லை என்றே தெரிகிறது.
துரைமுருகன் - அண்ணாமலை: 50 வருடங்களாக எம்.எல்.ஏவாக இருக்கும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான துரைமுருகன் ஏன் தனது கருத்தில் இருந்து பின்வாங்குகிறார்? ரஜினிகாந்த்தை பற்றி பேசிவிட்டு, பின்னர் கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன்பிறகு அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பச் செல்கிறார். தான் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என நினைக்கிறார் துரைமுருகன். இதுபோன்ற எந்த எண்ணமும் இல்லாமல் தான் வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறார் அண்ணாமலை. அவரது கட்சிக்குள்ளேயே தமிழிசை உள்ளிட்டோர் கண்டிக்கின்றனர்.
கேள்வி: சமீப நாட்களாக, திமுகவும் பாஜகவும் நெருங்கி இருப்பதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்
மணி: 22 எம்.பிக்கள் இருந்தாலும் மத்தியில் அதிகாரம் இல்லாமல் இருக்கிறது திமுக. மோடி அரசுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பல வகைகளில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியும். வெளிப்படையாக தெரியாமலேயே பல வகைகளில் திமுக, பாஜக அரசுக்கு மறைமுகமாக உதவ முடியும். அதற்கு பிரதியுபகாரமாக பல விஷயங்களை பெற முடியும். விசாரணை ஏஜென்சிகளின் ரேடாரில் இருக்கும் அமைச்சர்களை காப்பாற்ற முடியும். அந்த அடிப்படையில் சில அண்டர்ஸ்டாண்டிங் இருக்கக்கூடும்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications