நிவாரணத்தை விடுங்க.. சென்னை ரேஷன் கடைகளில் நடக்கும் முக்கிய மாற்றம்.. அமைச்சர் சொன்ன தகவல்!
சென்னை: நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை வெள்ளம் மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. இந்த நிலையில் புயல் வெள்ளம் காரணமாக அத்தியாவசிய சேவைகள் பல பாதிக்கப்பட்டு வருகின்றன.
அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு: உதாரணமாக சென்னையில் மின் தடை காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் பல இடங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதிக்கு ஏன் மின்சாரம் வரவில்லை.. ஏன் இன்னும் மின் தடை நிலவுகிறது என்று கோரிக்கை வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.
நேற்று இரவில் இருந்தே மக்கள் இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. சாலையில் இருக்கும் மின்சார பாக்ஸ்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மின்சாரம் ட்ரிப் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ஆவின் தட்டுப்பாடு: அதேபோல் சென்னையில் புயல் காரணமாக பல இடங்களில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டீ கடைகளில் கூட போதிய பால் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. பல வீடுகளில் பால் இல்லை. பெரும்பாலான இடங்களில் பால் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
காய்கறி விலை உயர்வு: இதற்கு இடையில்தான் இன்று காய்கறி வாங்க சென்னை மார்க்கெட் சென்ற மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் காய்கறிகள் சற்று விலை உயர்ந்து உள்ளது.
கனமழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.10 வரை உயர்ந்து உள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.32, கத்தரிக்காய் ரூ.40, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வரத்து சீராகி ஓரிரு நாட்களில் காய்கறிகளின் விலை குறையும் என்று வியாபாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். புயல் வெள்ளம் காரணமாக வாகனங்கள் வரவில்லை.
பல சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் போதிய அளவில் வாகனங்கள் வரத்து இல்லை. இதன் காரணமாகவே விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு சீர் செய்யப்படும் என்று வியாபாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
பல அடிப்படை சேவைகள் பாதிக்கப்பட்டாலும் சென்னையில் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன அண்ணா நகர், திருவான்மியூரில் 2 குடோன்களில் மட்டும் தண்ணீர் புகுந்துள்ளது; 11 நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எங்கும் பெரிய பாதிப்பில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் நிவாரண நிதி ரூபாய் 6000 மக்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் ரேஷன் கடைகளை தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications