ஓபிஎஸ் என்ன பேசுறாரு? டிவியில் பார்த்த இபிஎஸ்.. வீட்டில் பதற்றமாக குவிந்த எம்எல்ஏக்கள்! நடந்தது என்ன
What is he saying?: Edappadi Palanisamy watched O Panneerselvam's press meet. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. மீண்டும் தர்மயுத்தம் 2.0 போல இரவோடு இரவாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் நி
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. மீண்டும் தர்மயுத்தம் 2.0 போல இரவோடு இரவாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளை மீடியா முன் பேசி இருக்கிறார். சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 20+ மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசி உள்ளனர். ஆனால் இதை ஓ பன்னீர்செல்வம் சுத்தமாக விரும்பவில்லை.
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய வேண்டும் என்று அவர் வீட்டில் 4 மீட்டிங், இபிஎஸ் தனியாக 3 மீட்டிங், இவர்கள் இல்லாமல் மற்ற நிர்வாகிகள் 5 மீட்டிங் என்று கிட்டத்தட்ட ஒரு டஜன் மீட்டிங் அதிமுகவில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்துவிட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிலையில்தான் இன்று நிர்வாகிகளை சந்தித்தபின்.. மனம் கேட்காத ஓ பன்னீர்செல்வம் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து தனது குமுறல்களை மைக் முன் கொட்டி தீர்த்தார்.
அவர் தனது பேட்டியில், ஜெ.வுக்கே உரிய நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை யாருக்கும் தரவே கூடாது.. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர வேண்டும். 14 சீனியர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு உருவாக்கப்பட வேண்டும். ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்த பேட்டி அளித்ததை எடப்பாடியும் நானும் இணைந்து கண்டிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளருக்குதான் கையெழுத்திடும் அதிகாரம் என முதலில் என்னிடம் தெரிவித்து பின்னர் மீறினர். அதிமுக எந்த ஒரு காரணத்துக்காகவும் உடையக் கூடாது; எடப்பாடியுடன் பேச தயார்.

என்ன சொன்னார்?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது இன்றைய சூழ்நிலையில் தேவை இல்லை. எனக்கு அதிகார ஆசை இல்லை- தொண்டர்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் இரட்டை தலைமை நடைமுறைக்கு வந்தது- ஒற்றைத் தலைமை என்பது இப்போது தேவை இல்லை. பொதுச்செயலாளர் பதவி தேவை என ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவர முடியாது. பொதுக்குழு அஜெண்டா தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஒற்றைத் தலைமை குறித்து பேச வேண்டாம் என தலைமை கழக நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறேன். அதிமுகவில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் மிகப் பெரிய வருத்தம் தருகிறது. அதிமுகவில் இணையும்போது உச்சபட்ச அதிகார பதவியை எதுவும் கேட்டதும் இல்லை. தற்காலிக ஏற்பாடாகவே பொதுச்செயலாளர் பதவியை அன்று சசிகலாவுக்கு கொடுத்தோம். எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது தவறு எதுவும் இல்லை. சசிகலா விவகாரத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள்தான் முடிவு எடுப்பார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரும் இருக்கவேண்டாம் என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராகிய என்னிடம் கலந்து பேசாமல் மா.செ.க்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினர். ஒற்றைத் தலைமை குறித்து ஜெயக்குமார் பேட்டி கொடுத்ததுதான் பூதாகரமாக போய் கொண்டிருக்கிறது. கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.நான் துணை முதல்வர் பதவி ஏற்க பிரதமர் மோடிதான் காரணம், என்று ஓ பன்னீர்செல்வம் தனது பேட்டியில் ,குறிப்பிட்டார்.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை விவகாரம், ஜெயக்குமார் பேட்டி, எடப்பாடியுடன் பேச தயார், மோடி சமரசம் பேசியது, சசிகலா விவகாரம் என்று பல விஷயங்களை ஓ பன்னீர்செல்வம் உடைத்து பேசினார். இன்று ஓ பன்னீர்செல்வம் 30 நிமிடம் பேசினார். அவர் பேட்டி கொடுக்கும் விஷயம் முன்பே செய்தியாளர்களுக்கு சென்றது. இதனால் எடப்பாடியும் இந்த பேட்டியை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவர் இன்று சேலம் போன நிலையில், வீட்டில் ஆலோசனை செய்து வந்தார்.

சேலம்
இன்று மாலை அவரின் வீட்டிற்கு கொங்கு மண்டல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் வந்துள்ளனர். அங்கு எடப்பாடி ஒற்றை தலைமை பற்றி ஆலோசித்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி எடப்பாடி பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் ஆலோசனைக்கு இடையில்தான் ஓபிஎஸ் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருக்கும் டிவியில் நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து ஓபிஎஸ் பேட்டியை பார்த்துள்ளனர்.

டிவியில் பார்த்தனர்
ஓபிஎஸ் என்ன பேசுகிறார் என்று நிர்வாகிகள் கூர்ந்து கவனித்து உள்ளனர். 30 நிமிட பேட்டி முடிந்ததும் அதை பற்றி சில நிமிடங்கள் தீவிரமாக ஆலோசனை செய்துள்ளனர். அவர் கூறிய பல்வேறு விஷ்யங்களை, அதன் உள் அர்த்தத்தை தீவிரமாக ஆலோசனை செய்துள்ளனர். தொடர்ந்து தற்போதும் எடப்பாடி வீட்டில் ஆலோசனை சென்று கொண்டு இருக்கிறது. ஓபிஎஸ் இப்படி ஓப்பனாக பேசியதை பார்த்து எடப்பாடி தரப்பு கொஞ்சம் டென்ஷனாகி தீவிரமாக விவாதம் செய்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications