ஏர் இந்தியா விமானத்தில் 'இந்து உணவு' என்றால் என்ன.. அடுத்த சர்ச்சை.. நெட்டிசன்கள் கூறுவது என்ன?
சென்னை: ஏர் இந்தியா விமானத்தில் 'இந்து உணவு' என்ற பெயரில் காட்டும் ஆப்சன் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் நெட்டிசன்கள் சர்ச்சையை கிளம்பி உள்ளனர். இந்து உணவு என்றால் சைவம் மற்றும் சிக்கன் தானா என்றும், மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி ஏன் வழங்கப்படுவது இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏர் இந்தியா விமானங்களில் செல்லும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்து உணவு என்ற பெயரில் ஆப்சன் காட்டுகிறது. அதில் சைவ உணவு மற்றும் நான் வெஞ்ச் உணவாக சிக்கன் காட்டுகிறது. மாட்டுக்கறி காட்டப்படுவது இல்லை.. இதை சிலர் விமர்சித்துள்ளனர்.இதற்கு பதில் அளித்துள்ள ஏர் இந்தியா எங்கள் இணையதள பக்கத்தில் என்னென்ன வகை உணவுகள் வழங்கப்படுகிறது என்பதை காண முடியும் என்று கூறியுள்ளது.

ஏர் இந்தியாவின் இணையதள பக்கத்தில், கூறப்பட்டுள்ளது படி, ஆறு மணி நேர பயணம் செய்வோருக்கு ஒரு மேஜர் உணவு வழங்கப்படுகிறது. 6 முதல் 8 மணி நேரம் பயணிப்போருக்கு, ஒரு மேஜர் சாப்பாடு மற்றும் ஒரு மினி டிபன் ஆகியவை வழங்கப்படுகிறது. அதேபோல் 8 முதல் 10 மணி நேரம் பயணிப்போருக்கு இரண்டு மேஜர் உணவுகள் (இரண்டு சாப்பாடு) வழங்கப்படுகிறது.
10 மணி நேரத்திற்கு அதிகமாக பயணிப்போருக்கு இரண்டு மேஜர் சாப்பாடு, இரண்டு மினி டிபன் வழங்கப்படுகிறது. இதில் மேஜர் மீல்ஸ் என்பது காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் காலை உணவு என்பது அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மதிய உணவு காலை 11 மணி முதல் 2.30 மணி வரையிலும், ஸ்னாக்ஸ் பிற்பகல் 2.31 முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு மாலை 6.01 முதல் இரவு 10.30 மணி வரையிலும், இரவு 10.31 மணி முதல் அதிகாலை 3.59 மணி வரையில் சிற்றுண்டி உணவுகளும் வழங்கப்படுகிறது.
இதில் உணவினை பொறுத்தவரை 11 வகையான உணவுகள் ஏர் இந்தியாவில் வழங்கப்படுகிறது. அதில் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு., க்ளூட்டன் இல்லாத உணவு, பழ தட்டு உணவு, நான் வெஜ் உணவு, ஏசியன் சைவ உணவு, வீகன் மீல், ஜெயின் மீல் கஷீர் மீல்ஸ், முஸ்லீம் உணவு, இந்து உணவு, பேபி மீல்ஸ், குழந்தைகள் உணவு ஆகியவை ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்படுகிறது.
இதில் இந்து மீல்ஸ் அதாவது இந்து உணவு என்பது சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் கோழி, மீன், முட்டை, காய்கறிகள், மாவுச்சத்து அல்லது பால் பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகிறது.. ஆனால் இதில் மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி ஆகியவை இந்து உணவின் கீழ் ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படுவது இல்லை. இதேபோல் ஏர் இந்தியாவின் விமானங்களில் அசைவ உணவுகளிலும் மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி வழங்கப்படுவது இல்லை.
இது பற்றி நெட்டிசன்கள் கூறுகையில், அது எப்படி மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி இந்திய உணவு இல்லை என்று விமர்சித்துள்ளனர். மாட்டுக்கறி பலரும் சாப்பிடும் உணவாக இந்தியாவில் இருக்கும் போது அதை தர மறுப்பது ஏன் என்றும், அதை இந்திய உணவாக ஏன் அங்கீகரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதேநேரம் நெட்டிசன்கள், இந்தியாவில் பெரும்பாலானோர் மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி உண்பது இல்லை எனவே தான் அதனை ஏர் இந்தியா தரவில்லை என்று பதில் அளித்துள்ளார்கள். இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகி வருகிறது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications