சாதா ஏசிக்கும் இன்வெர்ட்டர் ஏசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கரண்ட் பில்லை குறைக்க எப்படி உதவுகிறது?
சென்னை: இன்வெர்ட்டர் ஏசியில் கரண்ட் பில்லை குறைக்க பயன்படுத்தப்படும் டெக்னிக் என்ன என்பதை பார்ப்போம்.
கோடை காலம் வந்தாச்சு... 10க்கு 10 அடி அறைக்கு ஒன்றரை டன் ஏசி கூட போதவில்லை. அந்த அளவுக்கு அனலாக இருக்கிறது. அறையில் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு போட்டுவிட்டு சென்றால்தான் கொஞ்சமாவது கூலிங்காக இருக்கிறது.

பணக்காரர்களின் வீடுகளை தவிர மற்ற வீடுகளில் பாத்ரூம்களை தவிர மற்ற இடங்களில் ஏசி இருக்கிறது. அந்த காலத்தில் எந்த ஏசியும் இல்லை புங்க மரத்திற்கு அருகேயும் வேப்ப மரத்திற்கு அருகே கீற்று கட்டிலை போட்டு படுத்திருந்தார்கள்.
இன்றும் கிராமங்களில் சில வீடுகளில் இப்படித்தான். ஆனால் பல வீடுகளில் ஏசி போட்டாகிவிட்டது. ஏசி இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வாயுவால் ஓசோனில் ஓட்டை விழுகிறது என சொல்கிறார்கள். ஆனால் ஏசி இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதில் கையை கடிக்கும் விஷயம் என்னவென்றால் ஏசி இயந்திரத்தை கூட இஎம்ஐயில் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த மின்சார கட்டணத்தை நினைத்தால்தான் பகீரென்கிறது. இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆன் ஆஃப் செய்தாலும் , மார்ச், ஏப்ரல் , மே, ஜூன் ஆகிய மாதங்களில் கரண்ட் பில் எகிறத்தான் செய்கிறது. இதை எப்படித்தான் குறைக்கிறது என்றே தெரியவில்லை என பலர் ஏசியை போட்டால் கூலாக இருக்கிறது, ஆனால் கரண்ட் பில் ஹாட்டாக இருக்கிறதே என புலம்புகிறார்கள்.
சிலர் ஏசியை வாங்கி தப்பு செய்துவிட்டோமோ என எண்ணுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஏசி இயந்திரம் விடிய விடிய ஓடினாலும் கரண்ட் செலவை குறைப்பது எப்படி என பார்க்கலாம். ஏசியில் 16, 17 உள்ளிட்ட டென்ப்ரேச்சரை வைத்தால் கரண்ட் பில் ஏறத்தான் செய்யும். ஆனால் 24 , 25 என உங்கள் உடலுக்கு ஏற்ப டெம்ப்ரேச்சரை வைத்தால் புழுக்கமாக இருக்காது. கரண்ட் பில்லும் மிச்சமாகும்.
போன சம்மருக்கு பயன்படுத்திய ஏசியை இந்த சம்மருக்கு பயன்படுத்தினால் கரண்ட் பில் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரு சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்தினால் கரண்ட் பில் மிச்சமாகும். ஏசியை ஆன் செய்வதற்கு முன்னர் கதவு, ஜன்னல்கள், பால்கனிகளை மூடிவிடுங்கள். இதனால் வெளியே இருக்கும் சூடான காற்று உள்ளே வராது. உள்ளே இருக்கும் கூலிங்கான காற்று வெளியே போய் உங்களுக்கு கரண்ட் பில் அதிகரிக்காது.
இன்னும் ஏசி வாங்காதவர்கள் இந்த சம்மருக்கு ஏசி வாங்குவதாக இருந்தால் ஸ்லீப் மோட் என்ற ஆப்ஷன் இருக்கும் ஏசியை வாங்குவது சிறந்தது. அந்த ஆப்ஷன் இருந்தால் ரூம் டெம்ப்ரேச்சருக்கு ஏற்ப தானாகவே ஆப் ஆகி ஆனாகிவிடும். இதனால் 36 சதவீதம் மின்சார கட்டணம் குறையும். ஏசி ஓடும் போது ஃபேனையும் இயக்கினால் கூலிங் காற்று மூலை முடுக்கெல்லாம் போய் சேருவதால் கரண்ட் பில் மிச்சமாகும்.
இன்வெர்ட்டர் ஏசி குறித்த புரிதல் மக்களுக்கு இல்லாமல் உள்ளது. இன்வெர்ட்டர் ஏசி என்றால் கரண்ட் இல்லாத நேரங்களிலும் ஏசி இயங்கும் என மக்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள். அது தவறு. மற்ற ஏசிகளில் Alternate Current AC பயன்படுத்தப்படுகிறது. இதில் கூலிங் ஃபேனின் ஸ்பீடை உள்ளுக்குள்ளேயே குறைக்காது. இதனால் எப்போதும் ஏசி ஒரே ஸ்பீடில் ஓடுவதால் அதிக அளவு கரண்ட் பில் இழுக்கும்.
ஆனால் இன்வெர்ட்டர் ஏசிக்களில் அப்படி இல்லை. Direct Current (DC) பயன்படுத்தப்படுகிறது. இதில் புல்லிங் திறன் அதிகமாக இருக்கும். இன்வெர்ட்டர் ஏசியில் கம்ப்ரெஸ்ஸரின் ஸ்பீடு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நான் இன்வெர்ட்டர் ஏசி கம்ப்ரெஸரில் ஃபிக்ஸடு ஸ்பீடு இருக்கும். ஃப்க்ஸடு கம்ப்ரச்சரை விட variable speed compressorரே சிறந்தது. வேரியபிள் கம்ப்ரசரில் குறைந்த அளவு சப்தம் கேட்கும். இன்வெர்ட்டர் ஏசியானது அறையின் வெப்பநிலைக்கு ஏற்க கம்ப்ரச்சரின் மோட்டர் ஸ்பீடை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் திறன் உள்ளது.
இன்வெர்ட்டர் ஏசிக்களில் கூலிங்கிற்காக ஆர் 32 என்பது பயன்படுத்தப்படுகிறது. இது சிறந்த கூலிங் திறனை கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உமிழும். ஆனால் நான் இன்வெர்ட்டர் ஏசியில் பயன்படுத்தப்படும் கூலிங் ஏஜென்ட் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்களை உமிழும். ஏசி கரண்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக டிசி கரென்ட் பயன்படுத்தப்படுவதால் அதற்கு இன்வெர்ட்டர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications