வந்தே பாரத்தில் மட்டுமே கவாச் கருவி? தமிழ்நாட்டு ரயில்களில் இல்லையா.. ரயில்வே ஊழியர் சங்கம் பதில்
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் எத்தனை ரயில்களில் கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாசம் விளக்கம் அளித்தார்.
கவாச் கருவியை பொறுத்தவரை அரை கிலோ மீட்டருக்கு முன்பே ஆட்டோமேட்டிக்காக பிரேக் போட்டு நின்றுவிடும். சென்னை கோரமண்டல் ரயில் வந்து கொண்டிருக்கிறது. அதே டிராக்கில் இன்னொரு ரயில் வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ரயில்களிலும் கவாச் கருவி பொருத்தியிருந்தால் , இந்நேரம் ஆட்டோமேட்டிக்காக ரயில்கள் ஒரு கிலோ மீட்டர் முதல் அரை கிலோ மீட்டர் தூரத்தில் நின்று இருக்கும்.

அந்த கவாச் கருவியை ஒரு லிமிட்டில் இரண்டு மூன்று செக்சனில் தான் பொறுத்தி இருக்கிறார்கள். எல்லா செக்சனிலும் உள்ள என்ஜினுக்கும் பொறுத்தவில்லை. இதேபோல் tpws என்று அழைக்கப்படும் train protection warning system, ஆக்சிலரி வார்னிங் சிஸ்டம் என பல விஷயங்கள் 15 வருடங்களில் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது.இவை எல்லா இடங்களிலும் பொறுத்தப்படவில்லை.
இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தண்டவாளங்கள் இருக்கின்றன. இதில் 1000 முதல் 2000 கிலோ மீட்டருக்குத்தான் பொருத்தி இருக்கிறார்கள். அதனால் மீதம் இருக்கும் தூரத்திற்கும் பொறுத்தவேண்டும் என்று எங்கள் தொழிற்சங்கம் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 3.75 லட்சம் காலியிடங்கள் ரயில்வேயில் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் ரயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காலியிடங்கள். இவை இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது. லோகோ பைலட், ஸ்டேசன் மாஸ்டர், கார்டு, டெக்னீசியன், சூப்பர்வைசர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.
இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் எத்தனை ரயில்களில் கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்ய பிரகாசம், தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் அப்படி கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை. வந்தே பாரத் ரயில்களில் மட்டும் கவாச் சிஸ்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதேநேரம் கும்மிடிப்பூண்டி செக்சினில் ஓடும் சில ரயில்களில் மட்டும் tpws என்று அழைக்கப்படும் train protection warning system பொருத்தப்பட்டு இருக்கிறது. அக்சிலரி வார்னிங் சிஸ்டம் போன்றவை பரிசோதனை அடிப்படையில் சில இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பொறுத்தப்படவில்லை. பொறுத்தப்பட்ட இடங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. 95 சதவீதம் இடங்களில் இதுபோன்று விபத்துக்களை தடுக்கும் சிஸ்டத்தை பொருத்தியதாக எங்களுக்கு தகவல் இல்லை என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications