ஓரினச்சேர்க்கை திருமணம்னா என்ன? வழக்கை புரட்டி போட்ட பாயிண்டே இதுதான்.. உச்ச நீதிமன்றத்தில் திக்
சென்னை: ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாகச் அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மே 11ஆம் தேதி விசாரணை முடிந்த பின் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.

திறந்தவெளி கோர்ட்டில் இந்த விசாரணை செய்யப்பட்டது. இதனால் கோர்டில் வைக்கப்பட்ட வாதங்கள் மக்களுக்கும் தெரிந்தது. இந்த வழக்கில் பலர் மனுதாரர்களாக தங்களை இணைந்து இருந்தனர். திருமணம் செய்வதற்கான உரிமை என்பது LGBTQIA+ தம்பதிகள் காப்பீடு, தத்தெடுப்பு மற்றும் பரம்பரை சொத்து போன்ற திருமணத்துடன் தொடர்புடைய நன்மைகள் மற்றும் உரிமைகளைப் பெறலாம். இந்த வழக்கில் வைக்கப்பட்ட முக்கியமான சில வாதங்களை இங்கே பார்க்கலாம்.
வழக்கறிஞர் ரோத்தகி: மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்திய அரசியல் சாஸன பிரிவு 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு இல்லாமை), 16 (பொது வேலை வாய்ப்பில் சமத்துவம்), 19 (சுதந்திரம்) ஆகிய பிரிவுகள் LGBTQIA+ பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான உரிமை மறைமுகமாக வழங்குகிறது. இதுதான் சட்டத்திலேயே உள்ளது. அடிப்படை உரிமைகளில் ஒன்று இது. அது LGBTQIA+ பிரிவினருக்கும் பொருந்தும். 18 வயது நிரம்பியவர், தங்கள் விருப்பத்தின் பெயரில், யாரையும் கட்டாயம் செய்யாமல் திருமணம் செய்ய மேற்கட்ட சட்ட பிரிவுகள் அனுமதி அளிக்கிறது.
அது LGBTQIA+ பிரிவினருக்கும் பொருந்தும். குறிப்பாக 'நவ்தேஜ் சிங் ஜோஹர் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா' (2018) இல் SC தீர்ப்புகளுக்குப் பிறகு பிரிவு 377 IPC நீக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்க அவர்களின் திருமணத்தை தடுக்க முடியாது. அவர்களுக்கான திருமண உரிமைகளை தடுக்க முடியாது என்று வாதம் வைத்தார்.
மனுதாரர்கள் முக்கிய வாதம்;: விசாரணையின் போது, வேறு சில மனுதாரர்கள் வைத்த வாதத்தில், இந்தியா ஒரு திருமண அடிப்படையிலான கலாச்சாரம் கொண்ட நாடு. அப்படி இருக்க LGBT (லெஸ்பியன், கே, இருபாலினம் மற்றும் திருநங்கைகள்) தம்பதிகளுக்கு திருமண உரிமை வழங்கப்பட வேண்டும். மற்ற பாலினத் தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் வழங்கப்பட வேண்டும் . நிதி மற்றும் காப்பீட்டு உரிமை, பரம்பரை, வாரிசு உரிமை, தத்தெடுப்பு உரிமை மற்றும் வாடகைத் தாய் விஷயங்களில் கூட உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது.
எதிர்ப்பு வாதம்: அதே சமயம் இந்த திருமணங்கள் காரணமாக இந்திய திருமண உறவில் சிக்கல் ஏற்படும். முக்கியமாக குழந்தைகள் வளர்ப்பில் சிக்கல் ஏற்படும். குழந்தை முறையான பெற்றோர் அன்பை பெற முடியாமல் போகும். கலாச்சார ரீதியாக சிக்கல்கள், ஆபத்துகள் ஏற்படும் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.
குறைந்தபட்ச திருமண வயது: இந்த திருமணம் ஒப்புக்கொள்ளப்பட்டால் எந்த வயதில் திருமணம் அனுமதிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. உச்ச நீதிமன்றம் இதை பற்றி வாதத்தின் போது கேள்வி எழுப்பியது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது குறித்த கேள்விக்கு, லெஸ்பியன் ஜோடிகளுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆகவும், ஆண் ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு 21 ஆகவும் இருக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர் சிங்வி தனது வாதத்தில் குறிப்பிட்டார். திருநங்கைகளுக்கு, அவர்கள் அடையாளம் காணும் பாலினத்தின் அடிப்படையில் அதே திருமண வயது பொருந்தும் என்றும் அவர் வாதத்தில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் 10 நாட்கள் தொடர்ந்து வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications