"ஆபரேஷன் 25".. எடப்பாடியை சுற்றி வளைக்கும் பெரும் தலைகள்! வசமாக ஒரு சம்பவம் நடக்க போகுது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளதாம். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு இடையே அவருக்கு முக்கியமான சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறதாம்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி கண்ட்ரோலுக்கு வந்ததில் இருந்து வரிசையாக தோல்விகளை தழுவி வருவதாக ஒரு விமர்சனம் உள்ளது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. கடைசியாக விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துவிட்டது. இல்லையென்றால் 11வது தேர்தலாக அது மாறி இருக்கும். எடப்பாடி மீது பின்வரும் புகார்கள் இதற்காக வைக்கப்படுகின்றன.

aiadmk edappadi palanisamy

1. அதன்படி எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக வலிமையான முடிவுகளை எடுப்பது இல்லை.

2. அவர் வசீகரமான தலைவராக இல்லை. ஒரு இடத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தால் அங்கே வாக்குகள் அப்படியே மாறும். எடப்பாடியால் அப்படி செய்ய முடிவது இல்லை.

3. கீழே உள்ள தொண்டர்களை, நிர்வாகிகளை எடப்படியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

4. தேர்தல் செலவிற்கு பணம் கொடுப்பது, அதை சரியாக நிர்வாகம் செய்வது போன்ற விஷயங்களில் எடப்பாடி உஷாராக இல்லை.

5. எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பதில் வலுவாக இல்லை. விசிக உடன் கூட்டணிக்கு முயன்றார். நடக்கவில்லை. காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு முயன்றார் நடக்கவில்லை. அதன்பின் பாமக உடன் கூட்டணிக்கு முயன்றார். அதுவும் நடக்கவில்லை. இப்படி இருக்க அதிகபட்சம் தேமுதிக உடன் மட்டும்தான் கூட்டணி வைக்க முடிந்தது.

6. அதிகபட்சம் பாஜகவுடன் அதிமுகவிற்கு உறவு இருந்தது. ஆனால் அதையும் அண்ணாமலை - எடப்பாடி இடையிலான ஈகோ உடைத்துப்போட்டுவிட்டது.. இந்த கூட்டணி உடைய அவர்களின் ஈகோ யுத்தம் ஒரு காரணம் ஆகிவிட்டது.

எடப்பாடிக்கு சிக்கல்; இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளதாம். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு இடையே அவருக்கு முக்கியமான சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறதாம்.

1. அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே 6 மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவரின் நெடுஞ்சாலை வீட்டில் சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.

2. அதில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும். பிரிந்த தலைவர்கள் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

3. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். டிடிவி தினகரன் வந்தால் அவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசி உள்ளனர்.

ஆனால் இது எதையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர்கள் பேசியதை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதிமுகவில் அவர்களை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

ஆபரேஷன் 25: இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை 25 எம்எல்ஏக்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 எம்எல்ஏக்கள் ஒன்றாக போய் அவரிடம் கோரிக்கை மனுவை வைக்க உள்ளனராம்.

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். டிடிவி தினகரன் வந்தால் அவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+