ஓ இதுதான் ஜிகே மணியிடம் கோபப்பட காரணமா? பாஜக கூட்டணி.. மோதிக்கொள்ளும் ராமதாஸ் vs அன்புமணி
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாடுதான் மூத்த தலைவர் ஜிகே மணி மீது அன்புமணி கோபப்பட காரணம் என்கிறார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்துள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில், சட்டப்பேரவைக்கு நேரமானதாக கூறிய ஜி.கே.மணியிடம் கடுப்பாகி பதில் அளித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அதில் நீங்க சட்டசபைக்கு போய் என்ன பண்ண போறீங்க? அங்க அப்படியே பேச போறீங்களா? நீங்க பேசுவதை கேட்டுடுவாங்கா? உங்களை அங்கே பேசவே விட மாட்டாங்க? நீங்க பேசிதான் மாறுமா? , என்று அன்புமணி பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விமர்சனம்: அன்புமணியின் உடல்மொழி அவர் ஆணவமாக பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இவ்வளவு வெளிப்படையாக மூத்த தலைவரை செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் செய்வது விமர்சனங்களை சந்தித்தது. அன்புமணி இப்படி கோபம் அடைய.. பாமக - அதிமுக - பாஜக கூட்டணி இடையிலான பேச்சு வார்த்தை மோதல்தான் காரணம் என்கிறார்கள்.
பாமக கூட்டணி; அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டதுதான் பாமக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள்.
பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை.
யாருடன் கூட்டணி: இந்த நிலையில்தான், 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி: இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதன்படி பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட ஆடம் பிடிக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமனாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிதான் அன்புமணி கோரிக்கை வைக்க உள்ளாராம்..
பாஜக ரியாக்சன்: அமைச்சர் பதவிக்கு பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய அளவில் தனிப்பெரும்பான்மை பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அப்படி இருக்க.. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே அமைச்சர் பதவியை பின்னர் பார்க்கலாம்.
அன்புமணிக்கு மீண்டும் ராஜ்ய சபா பதவி.. இந்த முறை.. பாஜக சார்பாக வழங்குவதற்கு வேண்டுமானால் ரெடியாக இருக்கிறோம் என்று பாஜக கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம்.
ராமதாஸ்: ஆனால் அன்புமணியின் இந்த திட்டத்தை ராமதாஸ் விரும்பவில்லையாம். பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டில் பாமகவிற்கு மரியாதை குறையும். அதனால் பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக முடிக்க பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே.., ராமதாசுக்கு நெருக்கமாக இருக்கும் ஜி கே மணியிடம் அன்புமணி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications