Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடும் சூழலில், அவர் இன்றைய தினம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் தன்னிடம் ரூ.39 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சீமான், தனக்கு ரூ.5.11 லட்சம் மதிப்பிலான கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் இப்போது தேர்தலுக்கு ரெடியாகிவிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இதர மாநிலச் சட்டசபை வாக்கு எண்ணிக்கையுடன் வரும் மே 4ம் தேதி தமிழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

What is Seeman asset value as he filed his nomination in Karaikudi for tamil nadu election 2026

விஜய்

இந்த முறை தமிழகத்தில் 4 முறை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் வழக்கம் போலக் களத்தில் உள்ளன. இது தவிர விஜய்யின் தவெகவும் புதிதாகத் தேர்தல் களத்தில் குதித்து தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கிடையே வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய சூழலில், முதல் நாளான இன்றே சீமான் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சீமான் சொத்து விவரம்

இதற்கிடையே காரைக்குடியில் போட்டியிடும் நாதக தலைவர் சீமானின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சீமான் தன்னிடம் ரூ.39 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், 150 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தனது மனைவி கயல்விழியிடம் ரூ.2.57 கோடி சொத்து, 200 பவுன் அதாவது 1600 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ.5.11 லட்சம் கடன்

மேலும், தன்னிடம் ரொக்கமாக ரூ.50,000 & மனைவியிடம் ரூ.35,000 உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் உள்ள ரூ.39 லட்சம் சொத்துகள் அசையும் சொத்துகள் எனவும் தன்னிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு வங்கியில் 5,11,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சீமான் தேர்தல் பாதை

சீமானை பொறுத்தவரை அவர் கடந்த 2016 மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 2016ல் அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். முதல் தேர்தலில் சீமான் சுமார் 12,500 வாக்குகளை மட்டுமே பெற்ற சூழலில், 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அங்கு அதிமுகவின் சம்பத் வென்றார். 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் அங்கும் தோல்வி அடைந்தார். இருப்பினும் இந்த முறை அவர் 48 ஆயிரம் வாக்குகள், அதாவது கிட்டத்தட்ட 24.5% வாக்குகளைப் பெற்றிருந்தார். 2021ல் அங்கு திமுகவின் சங்கர் வென்றிருந்தார்.

இந்த முறை சீமான் காரைக்குடியில் போட்டியிடும் சூழலில், அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. அங்குப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் அமமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு தேர்போகி வி. பாண்டி போட்டியிடுகிறார். அதேபோல விஜய்யின் தவெக சார்பில் டாக்டர் டிகே பிரபு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+