அது என்ன புதுசா மஞ்சள் பஸ்.. இதில் அப்படி என்ன வசதி இருக்கு? ஓ இவ்வளவு மேட்டர் இருக்கா.. சபாஷ்
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் இன்று முதல் இயங்க உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது

இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. தற்போது பச்சை நிறத்தில் இருக்கும் எஸ்இடிசி பேருந்துகளுக்கு வெள்ளை - மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த புதிய பேரூந்துகளுடன் படங்களின் @tnstcbus வெளியிட்டு உள்ளது. வெள்ளை - மஞ்சள் கலந்த உருவத்தில் இந்த பேருந்துகள் உள்ளன.
குறைபாடுகளை களைய முடிவு: இது பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வந்தனர். அதன்படி பேருந்துகளில் மாற்றங்களை செய்துள்ளனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் @tnstcbus குழு உள்ளிட்ட சமூக வலைதள வாயிலாக கருத்துகளை பெற முடிவு செய்து கருத்துக்களை கேட்டனர்.
🥰#beautiesonroad #Alert!!!💐🥰
— TNSTC Enthusiasts (@tnstcbus) August 10, 2023
🚍🚌100 புனரமைக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் பிரத்தியேக துவக்க விழாவிற்கு தலைநகர் நோக்கி வருகிறது!!🎊🎉
🚍🚌100 TNSTC Beauties on the way to State Capital for its Grand Inaugural!🎊🎉
(10 August 2023)
Album: 1@tnstcbus @sivasankar1ss pic.twitter.com/iLvLjJsJmF
இது தொடர்பாக @tnstcbus குழு செய்துள்ள போஸ்டில்,
1. பேருந்துகளில் தலையணை உடனான படுக்கைகளை அமைத்தல் (Builtin Pillows on Sleeper)
2. யூஎஸ்பி சார்ஜர்களுக்கு பதிலாக சாதாரண சார்ஜிங் பாயின்களை அமைத்தல் (Conventional Charging ports Instead of easily damageable USB Charging points)
3. எளிதில் அழுக்கடையும் துணியாலான இருக்கைகளுக்கு பதிலாக ரெக்சின் இருக்கைகள் (Rexin seats instead of cloth ones).
போன்ற மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இந்த மாற்றங்களோடுதான் தற்போது மஞ்சள் பேருந்துகள் அமலுக்கு வந்துள்ளன. அதேபோல் பேருந்துகளில் புதிய கண்ணாடிகள்,. உள் பக்கம், டிஜிட்டல் போர்ட், இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும்
1. இருக்கைகள், ஜன்னல்கள், வாசிப்பு விளக்குகளின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்
2. பஸ்ஸின் உட்பக்கத்தை சுத்தம் செய்தல் குறிப்பாக ஜன்னல்கள் மற்றும் திரைகளை சுத்தம் செய்தல்
3. பேருந்துகள் செல்லும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
4. மாநிலம் முழுவதும் கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
5. அதிக எண்ணிக்கையிலான படுக்கை பேருந்துகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.
6. ஏசி பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் போன்ற மாற்றங்களும் செய்யப்பட உள்ளன.
எங்கு இயங்கும்: இன்று முதல் இந்த மஞ்சள் பேருந்துகள் இயங்க உள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுக்க நீண்ட தூர பயணங்களுக்கு இந்த பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
இன்னொரு பக்கம், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் பட்டியல்
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம்- 82
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம்- 112
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம்-44
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்-52
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை-99
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி-61
மொத்தம்-450 பேருந்துகள் வாங்கப்பட்ட உள்ளது.
#EXCLUSIVE #பிரத்தியேகம்
— TNSTC Enthusiasts (@tnstcbus) July 17, 2023
த.நா.அ.போ.க #கும்பகோணம்
T.N.S.T.C #Kumbakkonam
GLOBAL TVS கூண்டு கட்டுமாண பணிமனையில் புனரமைக்கப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்தது முதல் பேருந்து.
First refurbished bus got delivered.
TNSTC Enthusiasts@tnstcbus pic.twitter.com/k8EmEal6ks
பேருந்துகள்: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.
உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications