Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 - 50 கொடுங்க.. பட்டென்று கேட்ட அமித் ஷா.. ஒரு கணம் திடுக்கிட்ட எடப்பாடி.. உண்மையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக 50 சதவிகித இடங்களை கொடுக்க வேண்டும் என்று அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.

What is the 50- 50 demand from Amit Shah to Edappadi Palanisamy in the explosive Delhi meeting?

அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் நடத்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

டெல்லி காத்து எப்போதும் நல்ல காற்றாகவே இருந்தது இல்லை. அது கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. வரலாற்றை திரும்பி பார்த்தால் பல காலமாக நமக்கும் டெல்லிக்கும் மோதல்கள் இருந்துள்ளன. இப்போது வீசும் டெல்லி காற்றில் எடப்பாடி எப்படி சமாளிப்பார், என்ன செய்வார் என்று தெரியும்.

எடப்பாடி டெல்லி போன காரியத்தில் வெற்றி பெற்றாரா என்றால் 50: 50 சதவிகிதம் கூட வெற்றிபெறவில்லை. அண்ணாமலை பற்றி புகார் கொடுக்கவே சென்றார். ஆனால் அவரால் புகார் தர முடியவில்லை. அண்ணாமலை பாஜகதான் பெரிய ஆள் என்பது போல பேசிக்கொண்டு இருந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என்றெல்லாம் கூட பேசிக்கொண்டு இருந்தார். இப்போது இவர்களுக்கு இடையில் இருக்கும் மோதலில் சின்னதாக பஞ்சர் ஒட்டி இருக்கிறார்கள். ஆனால் இது அப்படியே இருக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த சந்திப்பு அண்ணாமலைக்கும் தோல்வி, எடப்பாடிக்கும் தோல்வி. எடப்பாடி எதிர்பார்த்தது போல அண்ணாமலையை மாற்றவில்லை. அண்ணாமலை எதிர்பார்த்தது போல அதிமுக கூட்டணியை உடைக்கவில்லை

அதிமுகவுடன் கூட்டணி இல்லை. ராஜினாமா செய்வேன். இனிமேல் இப்படித்தான் . ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றெல்லாம் கூறினார் அண்ணாமலை. அப்படி இருக்கும் போது இப்போது அண்ணாமலை எதுவும் செய்யவில்லையே.

அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் இல்லை. அண்ணாமலை எதையாவது பேசிக்கொண்டு இருந்தார். இப்போது பாருங்கள் அவர் எப்படி அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்.

2024ல் பிரதமர் முகம் தேவை என்பதால் பாஜகவுடன் எடப்பாடி இருப்பார். மோடி போன்ற தேசிய முகம் தேவை. ஆனால் 2026ல் எடப்பாடி பாஜகவுடன் இருப்பாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் அப்போது பாஜக ஒரு சுமை. அதனால் பாஜகவுடன் எடப்பாடி இருப்பாரா என்பது சந்தேகம்தான்.

எடப்பாடியிடம் அமித் ஷா 20 இடங்களை கேட்டுள்ளார். 40 இடங்களில் 20 இடங்களை கேட்டுள்ளார். அதாவது 50: 50 இடங்களை கேட்டுள்ளார். தொகுதியோடு இடங்களை கேட்டுள்ளார். இதை கேட்டு எடப்பாடி ஆடிப்போய் விட்டார். அவ்வளவு இடங்கள் கொடுப்பதா என்பது போல அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

What is the 50- 50 demand from Amit Shah to Edappadi Palanisamy in the explosive Delhi meeting?

10 இடங்களில் நாங்கள் நிற்போம். மீதம் உள்ள 10 நாங்கள் பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை நிற்க வைப்போம். தேமுதிகவை நிற்க வைப்போம். ஓபிஎஸ் அணிக்கு நிற்க வைப்போம் என்று கூறி உள்ளார்.

அதோடு ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்றும் குபேந்திரன் கேட்டு இருக்கிறார். ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். ஆனால் எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஓபிஎஸ் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு வங்கி குறையும். அவர்கள் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு வங்கி மேலும் சிதறும் என்று எடப்பாடியிடம் அமித் ஷா கூறி உள்ளார்.

எடப்பாடி இதை கேட்டு ஷாக் ஆகி உள்ளார். அண்ணாமலையை கண்ட்ரோல் செய்ய சென்றவருக்கு கூட்டணி பற்றிய பேச்சும், ஓபிஎஸ் பற்றிய பேச்சும் ஷாக்கை கொடுத்து உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+