Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணக்கு எல்லாம் வேண்டாம்.. ரொம்ப ரொம்ப ஈசி.. படத்திற்கான விடை என்ன? 8 செகண்டில் சொல்லுங்க பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் விடை என்ன? என்று கண்டுபிடிக்க வேண்டும். படத்தை பார்த்ததும் இது கணக்கு, போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி என நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். ரொம்ப ரொம்ப ஈசியாக எளிதில் இதற்கான விடையை கண்டுபிடித்துவிட முடியும். 8 செகண்டுக்குள் விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கவனிப்புத் திறன் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவர் தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து வருவதால் அவரது அறிவாற்றல் மேம்படுவதாகவும் கூறப்படுகிறது.

what-is-the-answer-to-the-optical-illusion-picture-tell-me-in-8-seconds

ஆப்டிகல் புதிர் படங்கள்

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகமாக டிரெண்ட் ஆகி வருகிறது. படங்களில் மறைந்து இருக்கும் விடையினை கண்டுபிடிக்க முயற்சித்து வெற்றி பெற்று விட்டால் தன் நட்பு வட்டாரங்களுக்கு பகிர்ந்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்றும் பரிசோதித்து பார்க்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் போலவே ஆப்டிகல் புதிர் படங்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் அதிகளவில் இதுபோன்ற புதிர் படங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களால் விடைக்கான பதிலை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று தங்கள் அறிவுத் திறனை பரிசோதித்து வருகிறார்கள்.

இப்படி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களையே குழப்பியடிக்க செய்யும் ஆப்டிகல் புதிர் படம் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முயன்று பலரும் தோற்றுப் போய் உள்ளனர். உங்களால் இதற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்யுங்கள்.

8 செகண்ட் டைம்

8 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதிபுத்திசாலி தான். கணக்கு பாடத்தில் புலி என்று சொல்கிறவர்களுக்கு எல்லாம் இது ஜுஜுபி என்று சொல்லிவிடுவார்கள். எனினும் அவர்களுக்கே 8 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லும் போது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். எனினும் 8 செகண்டுக்குள் சரியான விடையை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் கில்லி தான்.

ஆனால் கணிதம் என்றாலே நமக்கு ஆகாதப்பா என்று சொல்பவர்கள் இதற்கான விடையை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்தது தான். தண்ணீர் இல்லா காட்டுக்குள் விட்டது போல திருதிருவென விழித்துவிடுவார்கள். எனினும் சின்ன வாய்ப்பாடும், கணிதத்தின் அடிப்படையும், புரிந்துகொள்ளும் திறனும் பெற்றிருப்பவர்கள் விடையை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இப்படி மட்டும் நினைக்க வேண்டாம்.

அதிபுத்திசாலியா நீங்க?

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை முதலில் பாருங்கள். நெடுவரிசையாக கவனியுங்கள். அதாவது மேலிருந்து கீழ் பாருங்கள்.. 1, 4, 7, 27 என்று உள்ளது. இரண்டாம் நெடுவரிசையில் 2, 5, 8, 38 என்று உள்ளது. மூன்றாவது நெடுவரிசையில் 3, 6, 9, ? இடம் பெறுள்ளது. இதில் கேள்விக்குறி இருக்கும் இடத்தில் என்ன விடை என்று தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

what-is-the-answer-to-the-optical-illusion-picture-tell-me-in-8-seconds

கணக்கு தெரிந்தவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கின்றவர்கள் மட்டுமே இதற்கு விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக யோசிச்சால் போதும். 8 செகண்ட் என்ன 5 செகண்டிலேயே விடையை கண்டுபிடித்துவிடலாம். இப்போதே பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுக்கள்.

ரொம்ப ரொம்ப ஈசி

பார்க்கும் போது ரொம்ப பெரிய கணக்கு மாதிரி தெரிந்தது. ஆனால் ஒரே ஒரு சின்ன டிரிக்ஸ் தான். இவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என விடையை கண்டுபிடித்தவர்கள் நினைப்பது புரிகின்றது. 8 செகண்டுக்குள் முடியவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம்.

இன்னும் உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், மூன்று நெடுவரிசைக்கும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கிறதல்லவா.. அது தான் மேட்டர். அதை கண்டுபிடித்தாலே விடை வந்துவிடும். விடை 51 என்றோ, 50 என்றோ, 55 என்றோ வந்தால் அது தவறு.. ரொம்பவும் ஈசி. எனவே சரியான விடை என்ன? என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+