7000 கோடியில் எப்படி 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 தரப்படும்? ஸ்டாலின் மாஸ்டர்பிளான்.. இதான் பின்னணியா!
சென்னை: குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக முதலவர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் பேசினார். அவர் சொன்ன கணக்கு இடிப்பதாக பலரும் இணையத்தில் குறிப்பிட்டு வரும் நிலையில் தலைமை செயலக வட்டாரங்கள் இதுபற்றி தெரிவித்து உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் என்ன சொன்னார்?
7 ஆயிரம் கோடி நிதியில் இந்த நிதியாண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த நிதி ஆண்டுகளில் இதற்கான செலவினம் கூடும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு 70 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும் என்று பிடிஆர் கூறியதும் எத்தனை பெண்கள் இதனால் நலன் பெறுவார்கள். இந்த வருடம் எத்தனை பெண்களுக்கு நிதி கொடுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. இதை வைத்து பலரும் மனக்கணக்குகளை போட்டு வந்தனர். இந்த நிலையில்தான் இந்த திட்டம் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

விளக்கம்
முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் பெண்களுக்கு ரூபாய் 1000 கொடுப்பதை நாம் உதவித்தொகை என்று அழைக்காமல் பெண்களுக்கான உரிமைத்தொகை என்று அழைக்க வேண்டும். நாம் அளிக்கும் இந்த உரிமைத்தொகை நேரடியாக பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை செய்வதற்காக தற்போது கணக்கீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பேச்சு
இந்த நிதி ஆண்டில் ஒரு கோடி பேர் இந்த திட்டம் மூலம் பயன் பெறுவார்கள். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் போன்றவர்கள் இதனால் எளிதாக பயன் அடைய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதையடுத்து 7000 கோடியில் எப்படி 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 தரப்படும் கணக்கு இடிக்கிறதே.. 1 வருடத்திற்கு எப்படி கொடுக்க முடியும்.. குறைவாக ஒதுக்கப்பட்டு உள்ளதே என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

கேள்வி
இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்ததில்.. ஒரு நிதி ஆண்டு என்பது மார்ச் முதல் பிப்ரவரி இறுதிவரை தான். இதில் மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பரில்தான் தொடங்கும். செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை மொத்தம் 7 மாதங்கள். இதில் பயன் பெற போகும் பெண்கள் எண்ணிக்கை 1 கோடி. அப்படி கணக்கு வைத்தால் 1 மாதத்தில் இவர்களுக்கு ஆகும் செலவு ஆயிரம் கோடி. 7 மாதம் என்று வைத்தால் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும். இதை மனதில் வைத்து பிடிஆர், ஸ்டாலின் ஆகியோர் அந்த எண்ணிக்கையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications