சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால்.. வங்கியில் கடன் கிடைக்கும்? நடைமுறை என்ன?
சென்னை: இந்தியாவில் உள்ள பலரும் வங்கியில் கடன் வாங்க விரும்புவார்கள். அவர்கள் வங்கியில் கடன் பெற ஆசைப்பட்டாலும், சிபில் ஸ்கோர் சரியாக இருந்தால் தான் வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ கடன் தரும். எவ்வளவு சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் கடன் தரும் என்பதை பார்ப்போம்.
நம் நாட்டின் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்கிற சிபில் (CIBIL) என்ற அமைப்புக்கும், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் (CRIF Highmark) என்று நிறுவனத்துக்கும், எக்ஸ்பீரியன் (Experian) மற்றும் ஈக்விஃபிக்ஸ் (Equifax) ஆகிய நிறுவனங்களுக்கும் கடன் விவரம் தொடர்பான கிரெடிட் ஸ்கோர்களை வழங்க உரிமம் வழங்கியுள்ளது.
கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்கள் வழங்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் கடன் தகுதியைத் தீர்மானிக்க கிரெடிட் ஸ்கோர் எனப்படும் சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது.
கிரெடிட் ஸ்கோர் என்று அழைக்காமல் சிபில் ஸ்கோர் என்று அழைக்க காரணம் சிபில் அமைப்பு தான். இதுதான் இந்தியாவில் முதன்முதலாக கிரெடிட் ஸ்கோர் கொண்டு வந்தது இதனால் சிபில் ஸ்கோர் என்று மக்கள் அழைக்கிறார்கள். ஒருவர் வாங்கிய கடனை எப்படி அடைக்கிறார். எவ்வளவு காலத்தில் அதை திருப்பி செலுத்துகிறார் என்பதை பொறுத்தே, சிபில் ஸ்கோர் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவர் கடனை வாங்கி தவணைகள் அனைத்தையும் சரியாக கட்டி வந்தால் அவரது சிபில் ஸ்கோர் அதிகரிக்கும். சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் அவருக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். அவருக்குத்தான் கடன் கொடுக்க போட்டி போட்டு நிறுவனங்கள் அழைக்கும். அவர் கேட்காமலேயே இன்ஸ்டன்ட் கடன் வசதிகளையும் வங்கிகள் தரும். கிரிடிட் கார்டு சலுகைகள் கிடைக்கும்.
ஆனால் ஒருவர் கடனை திருப்பி செலுத்தாமல் விட்டாலோ, அல்லது மாதம் மாதம் இஎம்ஐக்கு சரியாக பணத்தை செலுத்தாமல் அபராதம் கட்டினாலோ அவரது சிபில் கடுமையாக பாதிக்கப்படும்.ஏதோ ஓரிரு மாதங்கள் என்றால் சரியாகிவிடும். அடிக்கடி மாதத்தவணையை முறையாக செலுத்தாவிட்டால் அவரது சிபில் நிச்சயம் பாதிக்கப்படும். அவர்களுக்கு குறைவான கடன் தொகை, அதிக வட்டி, குறுகிய காலத்தில் கடனை திரும்பக் கட்ட வேண்டும் என்று தான் வங்கிகள் அறிவிக்கும். அதாவது நேர்மையாக வங்கி கடனை செலுத்துபவர்கள் பர்சனல்லோன், வீட்டுக்கடன், வாகன கடன், கிரிடிட் கார்டு என பல சலுகைகளை குறைந்த வட்டியில் பெறலாம். ஆனால் கடனை செலுத்தாதவர்கள் இந்த சலுகைகள் எதையுமே பெற முடியாது, சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால் வங்கிகள் கடனே தரமாட்டார்கள்.
சரி உங்களின் கிரெடிட் ஸ்கோரை ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக நீங்களே சரிபார்க்க முடியும். பேங்க் பஜார் உள்ளிட்ட இணையதளங்களிலும் கிரெடிட் ஸ்கோரை இலவசமாகப் பார்க்க வசதிகள் வைத்துள்ளன. உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது உங்கள் ஸ்கோரைப் பாதிக்காது. எனவே பிழைகள், தவறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அடிக்கடி அதைச் சரி பார்ப்பது நல்லது. ஒருவரின் பான் எண் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோரை எளிதாக பார்க்க முடியும்.
இந்தியாவில் பெரிய வங்கிகள் எல்லாமே சிபில் ஸ்கோரை மையமாக வைத்தே கடன் அளவு மட்டும் வட்டியை தீர்மானிக்கின்றன. 750 புள்ளிகளுக்கு மேல் சிபில் ஸ்கோர் கொண்ட வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சில வங்கிகளில் 9.15% ஆக நிர்ணயம் செய்யப்பகிறது. கிரெடிட் ஸ்கோர் 700 முதல் 750 வரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் 9.35% ஆகவும் உள்ளது. அதைவிட குறைவான ஸ்கோர் வைத்துள்ளவர்களுக்கு அடுத்தடுத்து வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும்.
அதேநேரம் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் NA/NH அல்லது மைனஸ் (-1) என இருக்கும். அப்படி என்றால் அவர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாமலும் கடன் வாங்காமலும் இருப்பார். அதாவது, அவருக்கு கடன் வரலாறு என்பதே இருக்காது. அவர்கள் கடன் வாங்க வேண்டும் என்றால், அவர்கள் வாங்கும் சம்பளம், அவர்கள் பணியாற்றும் நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் அளவு வட்டி விகிதம் இருக்கும். முதலில் அதிக வட்டிக்குத்தான் கடன் இருக்கும். அதன்பிறகு கடனை முறையாக திருப்பி செலுத்தினால், அவருக்கு கடன் வட்டிவிகிதம் குறையும்.
பொதுவாக 750க்கும் மேல் இருந்தால் மிகச்சிறந்த சிபில் ஸ்கோர். அதேநேரம். ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 300-லிருந்து 549-க்குள் இருந்தால் மோசமான (Poor) சிபில் ஸ்கோர் ஆகும். கிரெடிட் ஸ்கோர் 550 முதல் 649-க்குள் இருந்தால் சாதாரணமானது. அதேநேரம் 650 முதல் 750 என்கிற அளவில் இருந்தால் நல்ல ஸ்கோர் ஆகும்.
கிரெடிட் ஸ்கோரை குறைக்க விரும்புவோர் சக்திக்கு மீறி கடன் வாங்காதீர்கள். நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்திவிட்டால் சிபில் ஸ்கோர் குறையும். அதேநேரம் கிரெடிட் கார்டில் அதிக பேலன்ஸ் வைக்க வேண்டாம். கடனை வசூலிக்க ஏஜென்டுகள் வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளாத அளவிற்கு நீங்கள் நாணயமானவராக நடந்து கொண்டாலும் சிபில் ஸ்கோர் குறையும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications