ஸ்டாலினின் பிரம்மாண்ட பிளான்.. "இந்தியா" கூட்டணியை வைத்து பக்கா மூவ்! அப்படியே பதறிய பாஜக.. ட்விஸ்ட்
சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இதில் முக்கியமான சில கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க உள்ளாராம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
முதல் கூட்டம் பீகார்.. இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இதில் முக்கியமான சில கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க உள்ளாராம்.
அதன்படி எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மாநில முதல்வர்களாக இருக்கும் மமதா பானர்ஜி, நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் சிங் மன், பினராயி விஜயன், சித்தராமையா போன்றவர்கள் தங்கள் மாநிலத்தில் நீட் தேர்விற்கு எதிராக மசோதாவையும், ஆன்லைன் ரம்மிகு எதிராக மசோதாவையும் கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
இதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளாராம். எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணையும் நிலையில் பாஜகவை கொள்கை ரீதியாக அனைத்து கட்டங்களிலும் எதிர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம்.
3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும்.
6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும். 7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது.
இந்த நிலையில்தான் அடுத்த கூட்டத்திலும், அதன்பின் 4வதாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் நீட், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து குரல் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. எதிர்கட்சிகளை கொள்கை ரீதியாக அணி திரட்டும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications