எதுக்கும் ரெடியா இருங்க.. மோடி உள்ளே வெளியே கேம்.. ராம்நாடா? மதுரையா? திமுக போட்ட பதில் பிளான்
சென்னை: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவும் இதற்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகிறதாம். இரண்டு தொகுதிகளில் இதற்காக தேர்தல் பணிகளை செய்யவும் திமுக தயாராக இருக்கிறதாம்.
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.

இதனால் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் இந்த முறை வடக்கில் பாஜகவிற்கு சரிவு ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் பெரிய எழுச்சி அடையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க வடக்கில் இழக்கும் இடங்களை தெற்கில் தட்டி தூக்கும் விதமாக மோடி தென் மாநிலத்தில்.. அதாவது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அங்கே இஸ்லாமியர்கள் உள்ளனர். ஒருவேளை அங்கே வென்றால் தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க மிகப்பெரிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று சென்ற ரிப்போர்ட் காரணமாக மதுரையில் களமிறங்கலாமா என்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறதாம். கோவையில் பாஜக வலுவாக இருந்தாலும், மத்திய தமிழ்நாட்டில், தென் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற திட்டம் உள்ளதாம்.
இதற்கு மதுரையே சரியாக இருக்கும் என்று டெல்லி கருதுகிறதாம். ராமநாதபுரத்தில் உளவுத்துறை ரிப்போர்ட்படி சாதகமான சூழ்நிலை இல்லை. கொங்கில், மதுரையில், கூட போட்டியிடலாம். ஆனால் ராமநாதபுரத்தில் போட்டியிட முடியாது. அங்கே பாஜகவிற்கு பூத் கமிட்டி கூட இல்லை. அப்படி இருக்க வெற்றிபெறுவது மிக கடினம். மோடி போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது பாஜகவிற்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டெல்லி நினைக்கிறதாம். இதனால்தான் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மதுரை பக்கம் மோடி போகஸ் திரும்பும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
திமுக ரெடி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவும் இதற்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகிறதாம். இரண்டு தொகுதிகளில் இதற்காக தேர்தல் பணிகளை செய்யவும் திமுக தயாராக இருக்கிறதாம்.
அதாவது மோடி ராமநாதபுரம் அல்லது மதுரை இரண்டில் எதில் போட்டியிட்டாலும் அதற்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் இடம் மாறலாம், ஆனால் நாமே அவர் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதிகளில் அவருக்கு எதிராக தேர்தல் பணிகளை தொடங்க ரெடியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் திமுக உள்ளதாம்.
ஜெயலலிதாவிற்கு எதிராக சுகவனத்தை நிறுத்தி எப்படி சர்ப்ரைஸ் கொடுத்தனரோ அதேபோல் அடிமட்ட தொண்டரை மோடிக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்ற திட்டத்திலும் திமுக இருக்கிறதாம். மோடி இன்னும் தமிழ்நாட்டில் போட்டியிடுவது 100 சதவிகிதம் உறுதியாகவில்லை. ஆனாலும் திமுக எதற்கும் தயாராக இருப்போம் என்ற நிலையிலேயே இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications