"here - there" என்ன வித்தியாசம்? ஐஏஎஸ் தேர்வில் கேட்ட கேள்வி.. 10 செகண்ட் டைம்.. ஜீனியஸ்னு நிரூபிங்க
சென்னை: ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வுகளில் மூளையை கசக்கி பிழிய செய்யும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் what is the differnce between "here" and "there"? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கான விடையை 10 செகண்டிற்குள் கண்டுபிடித்து பதில் சொல்லுங்கள். விடையை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.
இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக யுபிஎஸ்சி தேர்வு உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்வர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக பல கேள்விகள் கேட்கப்படும். அதிலும் குறிப்பாக நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் நுணுக்கமானதாக இருக்கும்.. அதாவது தேர்வர் ஒரு விஷயத்தை எந்த கோணத்தில் அணுகுகிறார் என்பதை எல்லாம் அறியும் விதமாக பல கேள்விகள்தான் கேட்கப்பட்டு இருக்கும்..

ஐஏஎஸ் கேள்வி: போட்டித்தேர்வுகளில் பொதுவாகவே இப்படியான கேள்விகள் அதிகம் இடம் பெற்றிருக்கும்.. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும்.. உண்மையில் நமது மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும் வகையில் இந்த கேள்விகள் அமைந்து இருக்கும்.. ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட சுவாரசியமான கேள்வி ஒன்றைத்தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்..
கேள்வி: what is the differnce between "here" and "there"?
என்ன வித்தியாசம்?: அதாவது here என்ற வார்த்தைக்கும் there என்ற வார்த்தைக்கும் இடையேயான வித்தியாசத்தை சொல்லுங்கள் என்பதுதான் கேள்வி.. இதற்கான விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.. உங்களுக்கு 10 வினாடிகள் டைம்.. அதற்குள் விடையை சொன்னால்.. நீங்கள் அதிபுத்திசாலிதான்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,..... 10...ஒகே டைம் முடிந்தது.
இது தான் விடை: இந்த கேள்விக்கான விடையை பலரும் எளிதாக கண்டுபித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. உங்களின் அறிவுத்திறன் அபாரமாக உள்ளது.. விடை என்னவென்று சொல்லவே இல்லை என நீங்கள் நினைப்பது புரிகிறது.. Here க்கும் there க்கும் இடையே உள்ள வேறுபாடு T தான்... அட இந்த கோணத்தில் யோசிக்காமல் போயிட்டேமே என விடையை கண்டுபிடிக்காதவர்கள் நினைக்கலாம்..
யுபிஎஸ்சி தேர்வுகளில் இதுபோல சில டிரிக்ஸ் கேள்விகள் தவறாமல் இடம் பெறும் என்று தேர்வர்கள் கூறுகிறார்கள். இப்போது எல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கூட இப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. சமீபத்தில் முடிந்த குரூப் தேர்வில் இப்படித்தான் ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது.
குரூப் 4 கேள்வி: கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்விலும் தேர்வர்களை மூளையை கசக்கி பிழிய வைக்கும் வகையில் மிகவும் நுணுக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது.. அதாவது, ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும்.
எத்தனை மாம்பழங்கள் இருக்கும்: 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது 'அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்? என்று கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் விடை ஜீரோ என்று சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். ஆனால், ஓட்டுனர் புத்திசாலியான நபர் என்பதால் முதலில் உள்ள 10 செக் போஸ்டில் மூட்டைக்கு ஒன்று என்று 3 மூட்டைக்கு மாம்பழம் கொடுத்தால். 10 செக் போஸ்ட் முடிய 30 மாம்பழங்கள் காலி ஆகும்.மீதம் மூட்டைக்கு 20 மாம்பழங்கள் இருக்கும்.
விடை என்ன?: 3 மூட்டைக்கு தலா 20 மாம்பழங்கள் என்று 60 மாம்பழம் இருக்கும். இதை இரண்டு மூட்டையாக பிரித்து ஒரு மூட்டைக்கு 30 என்று டிரைவர் மாற்றி வைக்கலாம். அதன்பின் அடுத்த 15 செக் போஸ்டில் இரண்டு மூட்டையில் இருந்து தலா 1 மாம்பழம் கொடுத்தால், ஒரு மூட்டைக்கு 15 மாம்பழம் என்று 2 மூட்டைக்கு 30 மாம்பழம் போக மீதம் 30 மாம்பழம் இருக்கும். அதை ஒரு மூட்டையில் போட்டு அடுத்த 5 செக் போஸ்ட்டில் 5 மாம்பழங்கள் கொடுத்தால் மீதம் 25 மாம்பழம் இருக்கும். இதுவே அதற்கான விடையாகும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications