Hotel Vs Inn: ஹோட்டல்- "இன்" இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சென்னை: எந்த ஊருக்காவது பயணம் மேற்கொள்ளும்போது ஹோட்டல், இன் என இரு வார்த்தைகளில் தங்கும் இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பதை பார்க்கலாம். அதன் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கு இரு பெயர்கள் இருக்கும். அவை ஒன்று போல் இருப்பதாக இருந்தாலும் வெவ்வேறு பயன்பாட்டுக்கு ஏற்றவை. உதாரணமாக ஹோம், ஹவுஸ் என இருக்கும்.

அது போல் ஹோட்டல், மோட்டல் என இருக்கும். இந்த நிலையில் நிறைய இடங்களில் Inn (இன்) என்ற சொல் இருக்கும். இப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது ஹோட்டல்கள் என்பது பெரிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் இடங்களில் பல அடுக்குகளை கொண்ட தங்கும் இடமாகும். இங்கு ஒவ்வொரு தளத்தில் அறைகள் இருக்கும். இவை விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நகரின் மையப்பகுதிகளில் அமைந்திருக்கும்.
இந்த ஹோட்டல்களில் நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், மீட்டிங் நடத்தும் வகையில் எண்ணற்ற வசதிகள் இருக்கும். அது போல் Multicuisine உணவகங்களும் இருக்கும். ஓட்டல்களில் அறைகளின் வசதி, ஹோட்டல்களின் ஸ்டார்களுக்கேற்ப வாடகை கூடவோ குறைவோ இருக்கும்.
அது போல் இன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். "இன்" என்பது அளவில் சிறியதாக இருக்கும். இங்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாக 20 அறைகள் இருக்கலாம். இந்த "இன்"-கள் நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள், சிறிய நகரங்களில் இருக்கும்.
அது போல் ஆடம்பரமான வசதிகள் எல்லாம் இருக்காது. தங்குவதற்குத் தேவையான கட்டில், வைஃபை, காலை உணவு உள்ளிட்டவை இருக்கும். இங்கு அறைகளின் வாடகை குறைவாக இருக்கும். சாதாரண வசதிகள் கொண்ட அறைக்கு ரூ 500 முதல் 1200 வரை வாடகை இருக்கும். ஏசி அறை என்றால் 1200 முதல் 2500 வரை வசூலிக்கப்படும். இதில் complementary breakfast கிடைக்கும். பண்டிகை காலங்களில் இங்கு வாடகை சற்று அதிகமாக இருக்கும். எனவே யாருக்கு எது தேவையோ அதை பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications
