Marriage VS Wedding.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா? இவ்ளோ நாள் இதுகூட தெரியாம போச்சே
சென்னை: திருமணத்தை ஆங்கிலத்தில் பெரும்பாலானவர்கள் Marriage, Wedding என கூறுகிறோம். ஆனால் உண்மையில் Marriage, Wedding என இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இது தெரியாமலே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சரி வாங்க Marriage, Wedding என்பதற்கு இருக்கும் வித்தியாசத்தை பார்க்கலாம்.
திருமணம்.. ஆணும், பெண்ணும் சட்டப்பூர்வமாக கணவன், மனைவியாக வாழ்வதற்கான சடங்கு. இரு வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்து வரும் ஆணும், பெண்ணும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கான முதற்படியாக திருமணம் உள்ளது.

ஆணும், பெண்ணும் சட்டப்பூர்வமாக கணவன்-மனைவியாகும் இந்த நிகழ்வை திருமணம், கல்யாணம், விவாகம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்து வருகின்றனர். ஆங்கிலத்தில் என்றால் Marriage, Wedding என கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் மேரேஜ், வெட்டிங் ஆகிய இரண்டு சொல்லுக்கும் வித்தியாசம் உள்ளன. இது சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலருக்கு தெரியாமல் உள்ளது. இதனால் தான் வித்தியாசத்தை அறியாமலேயே பலரும் மேரேஜ் வீட்டுக்கு செல்கிறேன். வெட்டிங் வீட்டுக்கு செல்கிறேன் என கூறி வருகின்றனர். இந்த பிழைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் மேரேஜ், வெட்டிங் என்ற இரண்டு சொல்லும் அர்த்தம் ஒன்று என நினைத்து வைத்திருப்பது தான்.
ஆனால் உண்மை என்னவென்றால் Marriage என்ற சொல் குறிக்கும் அர்த்தம் வேறு. Wedding எனும் சொல் தரும் அர்த்தம் வேறு. ஆனால் பேச்சுவழக்கில் பல சந்தர்ப்பங்களில் நாம் இதுபோன்ற சொற்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாமல் பேசி விடுகிறோம். பொதுவாக இது தவறாக பார்க்கபடாமல் இருந்தாலும் கூட நாம் 2 சொற்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை அறிந்து பயன்படுத்துவது என்பது முக்கியமானதாகும்.
அதாவது Marriage என்பது ஆண்-பெண் ஆகியோர் கணவன்-மனைவியான பிறகு இருக்கும் உறவை குறிக்கும். உதாரணமாக திருமண பதிவேட்டில் இருவரும் ஒருவரையொருவர் கணவன், மனைவியாக ஏற்றுகொள்வதாக கையெழுத்து போடும் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தையும், அதனை தொடர்ந்து கணவன்-மனைவி இடையேயான உறவையும் குறிக்கும்.
மாறாக Wedding என்பது திருமணத்துக்கான சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகளை குறிக்கும். ஒவ்வொரு திருமணத்தின்போதும் பல சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சடங்குகள் நடக்கும் நிகழ்வை தான் Wedding என அழைக்க வேண்டும். இதனால் இனி வரும் நாட்களில் Marriage, Wedding எனும் சொற்களை சரியாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இனிமேல் யாருடைய திருமணத்திற்காக போனால், நான், ஒரு வெட்டிங் நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று சொல்லுங்கள். மேரேஜ் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிடாதீர்கள். அப்புறம் பல்பு வாங்குவீங்க உஷார்.












Click it and Unblock the Notifications