பல அமைச்சர்கள் கைதாக போகிறார்கள்.. உதயநிதிக்கும் செக்.. அமலாக்கத்துறையின் பிளான் இதுதானா? போச்சு
சென்னை: டாஸ்மாக் வழக்கு தீவிரம் அடைந்து உள்ளது, இதற்கான ரெய்டுகளும் தீவிரம் அடைந்து உள்ளன. இந்த ரெய்டுகள் காரணமாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திருச்சி சிவா மற்றும் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
இரண்டு பேருமே பல அமைச்சர்கள் கைதாக போகிறார்கள்.. உதயநிதிக்கும் செக் வைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். அவர்கள் சொன்னது என்ன? அமலாக்கத்துறையின் திட்டம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

நக்கீரன் பிரகாஷ்
இந்த திமுக ஆட்சி முடியும் முன் 5 திமுக அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. அதில் உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு செல்வார். ஸ்டாலினை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வார்கள். இதை எல்லாம் திமுக எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். டெல்லியில் அதுதான் நடந்தது. அதுவே தமிழ்நாட்டில் நடக்கும்.
ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பினராயி விஜயன் குடும்பத்தில் எல்லோர் மீதும் கைவைத்தனர். இந்தியாவில் 100 ஈடி ரெய்டுகளில் 80 சதவிகிதம் தமிழ்நாட்டில் நடக்கிறது. டாஸ்மாக் விவகாரத்தில் ரெய்டு நடத்தினீர்கள். ஆனால் இதில் என்ன ஊழலை நிரூபித்தீர்கள். இதில் விசாகனை ஏற்கனவே ரெய்டு செய்தனர். ஏற்கனவே விசாரணை செய்தீர்கள். அவர் இந்த பொறுப்பிற்கு வரும் போதே எல்லாம் தெரிந்தே வந்தார்.
ஐஏஎசுக்கு என்று பெரிய லாபி இருக்கிறது. அவருக்கு என்று பவர் புல் லாபி உள்ளது. 8 ஐஏஎஸ் அதிகாரிகளை மணல் மேட்டரில் நெருக்கினீர்கள். அதில் பிறகு என்ன செய்ய முடிந்தது. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். துரைமுருகன், கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் என்று 5 அமைச்சர்கள் அமலாக்கத்துறை டார்கெட். அடுத்த டார்கெட் ஸ்டாலின். தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றிபெறவே முடியாது. என்ன செய்தாலும் ஆட்சியை பிடிக்கவே முடியாது.
அது பாஜகவிற்கே தெரியும். இதைத்தான் ராகுல் காந்தியும் கூறினார். அதனால் வேறு வழியே இல்லாமல் இப்போது ரெய்டு நடத்தி அமைச்சர்களை உள்ளே தள்ள பார்க்கிறார்கள். ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு அமலாக்கத்துறை ஏன் செல்கிறது. சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டதா? அவரை எப்படி சம்பந்தமே இல்லாமல் நூல் பிடித்து செல்கிறார்கள். விசாகன் கூறினாரா? விசாகன் சொன்னாரா நான் டாஸ்மாக் பணத்தை அவரிடம் கொடுத்தேன் என்று? அவர் என்ன விஜயா? வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவதற்கு? அந்த வருமான வரி அழுத்தம் காரணமாகவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஆகாஷ் பாஸ்கரன் மூலம் எப்படி உதயநிதி பிடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ரத்தீஷை பிடித்தால் திமுக முதல் குடும்பத்தை பிடிக்கலாம் என்று அமலாக்கத்துறை நினைக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் - ஸ்டாலின் முட்டாள்கள் இல்லை. ஒருவேளை முறைகேடு செய்திருந்தால் கூட.. செய்து இருக்கிறார்கள் வைத்துக்கொள்வோம்.. அப்படி செய்திருந்தால் கூட ஸ்டாலின் குடும்பம் வெளிப்படையாக இப்படி மட்டும் அளவு செய்ய மாட்டார்கள்.
சிலர் சொல்வது போல ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார். அமலாக்கத்துறைக்கு இதில் சிக்கல்தான். ஆனாலும் முதல் குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டிப்பாக அமலாக்கத்துறை கைது செய்யும், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா
தெலுங்கானாவில் சந்திசேகர ராவ் குடும்பத்திற்கு காய் வைத்தனர். அதே பார்முலாவை இங்கே கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்தான் வருமானம் தரக்கூடிய துறை. இங்கே மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை இப்போது குறைத்து சொன்னாலும் வழக்கில் போக போக விசாரணையை தீவிரமாக்குவார்கள். பல விஷயங்களை ஆலோசனை செய்கிறார்கள். டாஸ்மாக் முறைகேடு பற்றி தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்கிறார்கள். எத்தனை ஹாலோகிராம் அடிக்கிறார்கள் என்பது பற்றியும் கூட விசாரணைகளை செய்து வருகிறார்கள்.
இதில் பல கோடி முதலமைச்சர் குடும்பத்திற்கு சென்றுள்ளது. திமுக பதறிக்கொண்டு டெல்லிக்கு செல்ல காரணம். இப்போது இருக்கும் போக்கிலேயே சென்றால்.. திமுக மீண்டும் வெல்லும். திமுக நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்ய.. பல அமைச்சர்களை கைது செய்ய.. எல்லா அமைச்சர்களையும் லாக் செய்ய கூட டெல்லி தயாராக இருக்கிறது. இதுதான் டெல்லியின் பிளான்.
முதலமைச்சரின் முதன்மை குடும்பத்தை கை வைப்பார்கள். ஆனால் செந்தில் பாலாஜியை கைவைக்க மாட்டார்கள். இதுதான் நடக்க போகிறது பாருங்கள். ஜூன், ஜூலை மாதத்தில் இருந்து அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள். அடுத்தடுத்து முக்கியமான தலைகள் கைதாக போகிறார்கள். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை இப்போது குறைத்து சொன்னாலும் வழக்கில் போக போக விசாரணையை தீவிரமாக்குவார்கள். பல விஷயங்களை ஆலோசனை செய்கிறார்கள். டாஸ்மாக் முறைகேடு பற்றி தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்கிறார்கள். எத்தனை ஹாலோகிராம் அடிக்கிறார்கள் என்பது பற்றியும் கூட விசாரணைகளை செய்து வருகிறார்கள், என்று திருச்சி சிவா கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications