Gold Loan: தங்க நகைக் கடனை விரைவில் அடைப்பது எப்படி? வீட்டு லோனில் டாப் அப் பெற்று அடைக்கலாமா?
சென்னை: தங்க நகை கடனை விரைவாக அடைக்க வேண்டியது எப்படி என்பதையும் தங்க நகைகளை மீட்க வேறொரு கடன் பெறலாமா என்பது குறித்தும் பார்க்கலாம். எப்போதுமே எந்த செயலை செய்தாலும் அதற்குறிய நிபுணர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே செயல்படுவது நல்லது.
இதுகுறித்து வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நகைக்கடனை அடைக்கும் சிறந்த உத்தி என்ன? வீட்டுக்கடன் (top-up loan) வாங்கி நகைக் கடனை அடைக்கலாமா? என்பதை பார்க்கலாம். ஏற்கனவே, நகைக்கடனில் பொதுவாக வட்டி விகிதம் குறைவு. ஏனென்றால், அது அடமானம் சார்ந்த கடன்.

இப்போது, நகைக் கடனை அடைப்பதற்கு நீங்கள் மேலூட்ட வீட்டுக் கடனைப் (top up housing loan) பயன்படுத்தலாமா என்று கேட்கிறீர்கள். அவ்வாறு பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
உங்களது மேலூட்ட வீட்டுக் கடன் வீட்டினை மேம்படுத்த, மராமத்து வேலைகள் செய்வதற்காக, வீட்டினை விரிவாக்குவதற்காக வழங்கப்படுகிறது. தணிக்கையில் (audit) உங்களது பணம் வீட்டிற்காக செலவாகவில்லை என்றால், அதன் காரணமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டும்.
கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் வாங்குவதென்பது ஆரோக்கியமான விஷயமல்ல. நீங்கள் ஒரு படு குழியிலிருந்து மற்றொரு படு குழிக்கு தாவுகிறீர்கள். அவ்வளவே. புதிய கடனுக்கு, அதற்கான பரிசீலனைத் தொகைகள் (processing charges) செலுத்த வேண்டும். பணம் வீணாகும்.
மேலூட்ட வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகைகள் கிடையாது. மேலூட்ட வீட்டுக் கடனுக்குப் பொதுவாக வட்டி விகிதம் அதிகம்.
எனவே, தங்க நகைக்கடனை சீக்கரமாக கட்ட முயற்சி செய்யுங்கள். அதற்கு உங்களுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. அதனை இரண்டு வழிகளில் அடைய முயலுங்கள்.
1. அதிகமாக சம்பாதிக்கப் பாருங்கள் - வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை விற்பது, பகுதி நேர வேலைக்குச் செல்வது, முடிந்தால் மனைவியும் வேலைக்குச் செல்வது போன்ற பல வழிகளில் அதிகமாக பணம் திரட்டப் பாருங்கள்.
2. சிக்கனமாக வாழ்ந்து, சம்பாதித்த பணத்தில் அதிகமாக சேமிக்கப் பாருங்கள் - நிதி திட்டமிடல் செய்து, பணத்தை சேமியுங்கள். பணத்தை சேமித்து, சீக்கிரமாக நகைக்கடனை அடையுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
நாட்ல மழை இல்ல.. உங்க கையில மட்டும் எப்படி இவ்வளவு துட்டு! ரேட்டை ஏற்றிய ரோலக்ஸ்! ஆனாலும் ட்விஸ்ட்! -
வங்கிகளுக்குப் புதிய தலைவலி.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆடிப்போக வைக்கும் புள்ளி விவரம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications