இன்றைய தங்கம் விலை நிலவரம்.. சென்னை, மதுரை, திருச்சி, கோவை-யில் தங்கத்தின் விலை எவ்வளவு?
சென்னை: இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 19 அன்று 10 கிராமுக்கு ரூ.71,410 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,141 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,459 ஆக இருந்தது. சென்னையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,669 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,276 ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது).
கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.20% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 3.70% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.834.6 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை - ஆகஸ்ட் 19 காலை 7 மணி நிலவரப்படி:
சென்னையில் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 19 ஆம் தேதி 10 கிராம் ரூ.71,610 ஆக உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.70,350 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 12ஆம் தேதி 10 கிராம் ரூ.70,920 ஆகவும் இருந்தது. அதோடு ஒப்பிட்டால் 10 கிராம் தங்கத்திற்கு 1300 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது.
இது காலை 10 மணி நிலவரம் ஆகும். 2 மணிக்கு தங்கத்தின் விலை மீண்டும் அப்டேட் செய்யப்படும். அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம்.
மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,769 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,456 ஆகவும் உள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,889 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,555 ஆகவும் உள்ளது.
திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,825 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,576 ஆகவும் உள்ளது.
தங்க விலை கணிப்பு: 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும்.. அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2030ல் விலை உச்சம் அடையும்: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.
சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இதன் மூலம் 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் 86 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை எட்டலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications