"பேய்களின் சமையலறை.." கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஆள் காலி! மஞ்சும்மெல் பாய்ஸ் "குணா" குகை பின்னணி தெரியுமா
சென்னை: மஞ்சும்மெல் பாய்ஸ் படத்திற்குப் பிறகு மீண்டும் இப்போது குணா குகை எனப்படும் டெவில்ஸ் கிச்சன் பேசுபொருள் ஆகி இருக்கிறது. இந்த குகைக்கு ஏன் இந்த பெயர் வந்தது. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2021ஆம் ஆண்டு தனது முதல் படமான ஜன. இ.மேன் மூலமே மலையாளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் சிதம்பரம். இவர் இப்போது எடுத்த அடுத்த திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ்.

2000களில் நடந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை அவர் எடுத்துள்ளார். இதில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
மஞ்சும்மெல் பாய்ஸ்: இந்த படம் இப்போது தமிழில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆன போதிலும் பல ஊர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக மாற்று மொழி படங்கள் சென்னையில் மட்டுமே ஹிட் அடிக்கும் நிலையில், இந்த மஞ்சும்மெல் பாய்ஸுக்கு தமிழகம் முழக்க வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு மீண்டும் கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த டெவில்ஸ் கிச்சன் வேறு எதுவும் இல்லை.. குணா படத்தில் கமல் கண்மணி பாடலை பாடுவாரே அதே குகை தான். இதை உள்ளூர் மக்கள் குணா குகை என்று அழைத்தாலும் கூட இதன் பெயர் டெவில்ஸ் கிச்சன். எதற்காக இந்த குகைக்கு இந்த பெயர் வந்தது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
குணா குகை: டெவில்ஸ் கிச்சன் என்ற இந்த குகையை முதலில் 1821ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரி பி.எஸ். வார்டு என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும், அதன் பிறகு அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால் காலப்போக்கில் அதை அனைவரும் மறந்துவிட்டனர். கொடைக்கானல் பகுதியில் பெரிதாக யாரும் சீண்டாத ஒரு இடமாகவே 1990கள் வரை இது இருந்தது.
1992ஆம் ஆண்டில் குணா திரைப்படம் வெளியான நிலையில், மீண்டும் இந்த குகை லைம்லைட்டிற்கு வந்தது. குணா திரைப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோயினை கடத்தி சென்று குகையில் வைத்திருப்பார். இது முழுக்க முழுக்க இங்கே தான் படமாக்கப்பட்டது. அப்போது முதல் இது குணா குகையாக மாறியது.
பின்னணி: அதேநேரம் இதன் ஒரிஜினல் பெயரான டெவில்ஸ் கிச்சன் என்று பெயர் வர இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதல் காரணம் இந்து புராணத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பாண்டவர்களின் சமையல் இடமாக இது இருந்ததாலேயே இதற்கு இந்த பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் இந்த குகையில் முதலில் வௌவால்கள் அதிகம் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அதற்கு டெவில்ஸ் கிச்சன் என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
இது இயற்கை வசீகரத்தைச் சுற்றி இருந்தாலும் கூட அவற்றின் அழகிய வசீகரம் இருந்தபோதிலும், குணா குகையில் பல ஆபத்துகளும் கூட இருக்கிறது. 2230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குணா குகைக்குச் செல்வது அவ்வளவு ஈஸியானது இல்லை. இரண்டு பாறைகளில் ஏறிச் சென்று மூன்றாவதாக இருக்கும் செங்குத்தான பாறையில் இறங்க வேண்டும். சாகசத்திற்கும் ஆபத்துக்கும் இடையே அமைந்துள்ள குகை இப்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications