Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு சலுகைகளா? எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா தலை சுற்றுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதன்மூலம் 543 தொகுதிகளுக்கான எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த எம்பிக்களின் மாதசம்பளம், பிற அலோவன்ஸ்கள் உள்பட அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெறும் சலுகைகள் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் நாடாளுமன்றத்தில் இரு சபைகள் உள்ளன. ஒன்று லோக்சபா என்ற மக்களவை. இன்னொன்று ராஜ்யசபா எனும் மாநிலங்களவை. இதில் ஒவ்வொரு மாநிலங்களுக்கான ராஜ்யசபா எம்பிக்களை அரசியல் கட்சிகளின் எம்எல்ஏக்கள் தேர்வு செய்வார்கள். மாறாக லோக்சபா எம்பிக்களை மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்வு செய்வார்கள்.

lok sabha election 2024

அப்படித்தான் 543 லோக்சபா சபா தொகுதிகளுக்கான எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு ஜுன் 1ல் 7 வது கட்ட தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் 543 தொகுதிகளுக்கும் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த எம்பிக்களுக்கு மாதசம்பளம் , பல்வேறு அலோவன்ஸ்கள் மற்றும் சலுகைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அதாவது எம்பிக்களுக்கான அலோவன்ஸ் மற்றும் பென்சன் (திருத்தம்)சட்டம் 2010ன் கீழ் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் சம்பளம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எம்பிக்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் அடிப்படை சம்பளம் என்பது ரூ.50 ஆயிரமாகும். எம்பிக்களின் மாதசம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது.

மேலும் தொகுதி அலோன்ஸாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஸ்டேஷனரி செலவுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உள்பட அலுவலக செலவுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதோடு நாடாளுமன்றம் நடக்கும்போது தினசரி அலோவன்ஸாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.

அதோடு எம்பியாக தேர்வாகும் நபர்களுக்கு டெல்லியில் வீடு வழங்கப்படும். முதல் முறையாக எம்பியானால் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும், சீனியர் எம்பி என்றால் தனி பங்களாவும் வீடாக வழங்கப்படும். அதற்கு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியது இல்லை. வீடுகளில் 2 லேண்ட்லைன், ஒரு செல்போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. கட்டுப்பாடற்ற இணையதள வசதி எம்பிக்களுக்கு வழங்கப்படும். 4000 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

இதுதவிர எம்பிக்கள் கார்களில் பயணம் செய்யும்போது எம்பிக்களுக்கு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்கப்படுகிறது. மாதம் ரூ.500 மருத்துவ பரிசோதனைகளுக்கு வழங்கப்படுகிறது. விமான பயணம் எனில் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டும் செலுத்தினால் போதும். ரயில் பயணம் என்றால் ஏசி ஸ்லீப்பர் அல்லது பிசினஸ் வசதி இலவசம். இதன்மூலம் ரயில் பயணம் முழுவதும் இலவசமாகும். இது எம்பி மட்டுமின்றி அவருடன் செல்லும் உதவியாளர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பொருந்தும்

அதோடு எம்பிக்களின் குடும்பத்துக்கும் சில சலுகைகள் உள்ளன. எம்பிக்களின் மனைவி தங்களின் வீட்டில் இருந்து டெல்லிக்கு பயணித்தால் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் கட்டண சலுகையுடன் பயணிக்கலாம். நாடாளுமன்றம் நடக்கும்போது எம்பிக்களின் மனைவி விமானங்களில் கட்டண சலுகைளுடன் 8 முறை பயணிக்கலாம். மேலும் எம்பியாக பதவி வகித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் பென்சன் வழங்கப்படும். 5 ஆண்டுக்கு மேல் எம்பியாக இருந்தால் ஆண்டுக்கு இந்த பென்சன் தொகை என்பது ரூ.800 அதிகரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+