இத்தனை சலுகைகளா? எம்பியின் மாத சம்பளம் என்ன தெரியுமா? பங்களா டூ ரயில் பயணம் வரை ‛ப்ரீ’.. இதோ லிஸ்ட்
சென்னை: 18 வயது பூர்த்தியடைந்து வாக்குரிமை பெற்ற நாம் அனைவரும் நாளை நமது தொகுதிக்கான எம்பியை தேர்வு செய்ய ஓட்டளிக்க உள்ளோம். இந்நிலையில் தான் நாம் தேர்வு செய்யும் எம்பிக்களின் மாத சம்பளம், அவர்கள் பெறும் சலுகைகள் பற்றி நிறைய பேருக்கு தெரிவது இல்லை. வாங்க அதனை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். நாடாளுமன்றத்தை பொறுத்தவரை லோக்சபா, ராஜ்யசபா என 2 சபைகள் உள்ளன. இவர்களில் ராஜ்யசபா எம்பிக்கள் என்பவர்கள் கட்சியின் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டு.

மாறாக லோக்சபா எம்பிக்கள் என்பவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டு. நாளை நாம் ஓட்டளிக்க இருப்பது லோக்சபா தேர்தலில் தான். நாம் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை எம்பியை தேர்வு செய்தாலும் கூட அவர்களின் சம்பளம், சலுகைகள் பற்றிய விபரங்ள் பலருக்கும் தெரிவது இல்லை. ஆனாலும் சிலருக்கு தெரிந்து இருக்கலாம்.
வாங்க நாம் தேர்வு செய்யும் எம்பிக்களின் மாதசம்பளம், அலோவன்ஸ் குறித்த விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். அதாவது எம்பிக்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதோடு தொகுதி அலோவன்ஸாக மாதம் ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி அலுவலக செலவுக்காக மாதம் 60,000 ஆயிரம் வழங்கப்படும். இதில் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தபால் தொடர்பான செலவுக்காக வழங்கப்படும் ரூ.15 ஆயிரமும் அடங்கும். அதன்படி பார்த்தால் சுமார் 2.30 லட்சம் வரை எம்பிக்களுக்கு மாதசம்பளமாக கிடைக்கும்.
மேலும் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போது அவர்களுக்கு தினசரி அலோவன்ஸாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். உதாரணமாக 10 நாட்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அலோவன்ஸாக கிடைக்கும். இந்த அலோவன்ஸ் தொகை என்பது நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாட்களை பொறுத்து அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையும். அதோடு எம்பி மற்றும் அவர்களின் குடும்பத்தின் மருத்துவ செலவுக்காக ரூ.500 வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.
மேலும் எம்பிக்களின் பயணத்துக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது எம்பியாக இருப்பவர் காரில் பயணம் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.16 அலோவன்ஸாக வழங்கப்படும். விமான பயணம் எனில் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டும் செலுத்தினால் போதும். ரயில் பயணம் என்றால் ஏசி ஸ்லீப்பர் அல்லது பிசினஸ் வசதி இலவசம். இதன்மூலம் ரயில் பயணம் முழுவதும் இலவசமாகும். இது எம்பி மட்டுமின்றி அவருடன் செல்லும் உதவியாளர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பொருந்தும்.
இதுதவிர எம்பிக்களுக்கு டெல்லியில் வீடு வழங்கப்படும். முதல் முறையாக தேர்வு செய்யப்படும் எம்பிக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும். மாறாக மூத்த எம்பிக்களுக்கு தனியாக சொகுசு வீடு வழங்கப்படும். வீடுகளில் 2 லேண்ட்லைன், ஒரு செல்போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. கட்டுப்பாடற்ற இணையதள வசதி எம்பிக்களுக்கு வழங்கப்படும். 4000 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும் ஓய்வூதியமும் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி சம்பளம் மற்றும் அலோவன்ஸ் என்பது ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் மாற்றம் செய்யப்படும். சமீபத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எம்பிக்களின் சம்பளம், அலோவன்ஸ் குறைக்கப்பட்டது. அதாவது கொரோனா பரவல் காரணமாக எம்பிக்களின் மாதசம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாகவும், தொகுதி சலுகை ரூ.49 ஆயிரம், அலுவலக செலவுக்கான அலோவன்ஸ் என்பது ரூ.54 ஆயிரமாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications