தி லெஜென்ட்: அண்ணாச்சி நல்லாதானே நடிச்சிருக்காரு.. எதுக்கு கலாய்க்கணும்?.. நெட்டிசன்கள் உருக்கம்
சென்னை: லெஜன்ட் அருள் சரவணன் நடித்த தி லெஜென்ட் எனும் திரைப்படம் கடந்த 28 ஆம் தேதி திரைக்கு வந்தது.
Recommended Video
இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்திருந்தார். இவருடன் மறைந்த நடிகர் விவேக், சுமன், நாசர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை அருளே தயாரித்து அதை ஜே டி ஜெர்ரி என்பவர் இயக்கியுள்ளார். இது நாள் வரை அண்ணாச்சி என அழைக்கப்படும் அருள் அவரது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார்.

விளம்பரங்கள்
பொதுவாக கடை விளம்பரங்களுக்கு மாடல் அழகிகள், நடிகைகள், சின்னத்திரை நடிகர், நடிகைகளை வைத்து எடுப்பதுதான் வழக்கம். ஆனால் தி லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் சரவணனே நடித்தார். பளபளக்கும் முகத்துடன் கோட் சூட் அணிந்து கொண்டு மாடல்களுடன் அண்ணாச்சி டான்ஸ் ஆடி நடித்தது மக்களிடையே வரவேற்பை பெற்றது. இவரை பார்த்து போத்தீஸ் உரிமையாளரும் அவரது கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

உரிமையாளர்கள்
எனவே கடை உரிமையாளர்கள் விளம்பரங்களில் நடிப்பதற்கு டிரென்ட்டைஏற்படுத்தியவர் அருள் சரவணன். இந்த நிலையில் அவர் திரைப்படம் ஒன்றை தயாரித்து அதில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டன. இதை தாண்டி சென்னை, பொள்ளாச்சி, இமயமலைகளிலும் எடுக்கப்பட்டன. சர்க்கரை நோய் குறித்து அதை சரி செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களில் ஓனர்
விளம்பரங்களில் அருள் சரவணன் நடித்திருந்த நிலையில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். "சார் நாங்கள் வரோம், துணி வாங்குறோம். தயவு செய்து விளம்பரங்களில் மட்டும் நடிக்காதீங்கள்" என கிண்டல் செய்து வந்தனர். ஆனால் இந்த படத்தில் அருள் சரவணன் நன்றாக நடித்திருக்கிறார். இத்தனை வயதில் டான்ஸ் ஆடுவது, நடிப்பது எல்லாம் செய்திருக்கிறார். இன்னும் கேட்டால் ஆக்ஷன் படமாகவும் இது அமைந்துள்ளது என்கிறார்கள்.

எப்படி கிண்டல் செய்வது?
இந்த படம் குறித்து இதுவரை மக்கள் கருத்துகளில் யாருமே படம் ஃபிளாப் என்பதை போல் கூறவேயில்லை. இதுவே அருளுக்கு கிடைத்த வெற்றிதான். இது ஒரு புறமிருக்க சமூகவலைதளங்களில் "டேய் அண்ணாச்சியோட லெஜென்ட் படத்தை போடுறேன், வா கலாய்க்கலாம் என ஒருவர் அழைக்கிறார். அதற்கு அந்த நண்பரோ டேய் எங்க வீட்ல குளிக்கிற மக்கிலிருந்து நான் கால்ல போட்ற செருப்பு வரை எல்லாமே அவர் கடையில் வாங்கினது. எப்படிடா அவரை கலாய்ப்பது என்கிறார்கள். ஆக மொத்தம் சுருக்கமாக சொல்ல போனால் இந்த படம் நன்றாக இருக்கிறது என்றே கூறுகிறார்கள். இன்னும் சிலர் கடைக்கு வந்தா கட்டை பை தரமாட்றாங்க, அண்ணாச்சி உங்க படத்திற்கு வர்றவங்களுக்காவது கட்டை பை கொடுங்கள் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications