நம்பிக்கையே கிடையாது.. உறுதியாக சொன்ன உதயநிதி.. அட "நம்பரை" பார்த்தீங்களா? ரொம்ப தைரியம்தான்
சென்னை: திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன நிலையில், முக்கியமான புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு திமுக அரசின் 35வது அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். மொத்தம் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து இன்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர்
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன நிலையில், முக்கியமான புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் பல முறை தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, மூட நம்பிக்கைகள் மீது பற்று இல்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார். சமீபத்தில் கூட கடவுள் என்று சொன்னதும் இல்லை என்று உதயநிதி கூறியது குறிப்பிடத்தக்கது. இவர் கோவிலுக்கும் கூட சென்றதே இல்லை.

மாற்றம்
பிள்ளையார் வைத்து இவர் போட்ட புகைப்படம் கூட, கையில் பிள்ளையாரை பிடித்து இருந்த போது வீட்டில் எடுத்த புகைப்படம். அம்மா பிள்ளையார் சதுர்த்தியின் போது எடுத்த போட்டோ. தனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாமே இல்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார். திராவிட கொள்கைகளில் முக்கியமான ஒன்று கடவுள் மறுப்பு மற்றும் மூடநம்பிக்கை மறுப்பு. திமுகவின் பல தலைவர்கள் இந்த கொள்கையில் தளர்வாக இருந்தாலும் கூட உதயநிதி ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

பிள்ளையார்
இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு என்று அமைச்சர் ஆன நிலையில் கார் வழங்கப்பட்டு உள்ளது. எம்எல்ஏக்கள் பொதுவாக பர்சனல் கார்களை பயன்படுத்துவார்கள். அமைச்சர்களுக்கு என்று அரசு கார் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட கார்கள் வழங்கப்படும். அதன்படி இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று அரசு கார் வழங்கப்பட்டது. டொயோட்டாவின் சொகுசு மாடல் கார் உதயநிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இந்த காரின் எண் TN-04-D 6666. பொதுவாக அரசியல் தலைவர்கள், பொது மக்கள் 6666 எண்ணை பயன்படுத்த மாட்டார்கள். இது சாத்தான் நம்பர், கெட்ட சகுனம் கொண்ட எண் என்றெல்லாம் அதை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின் காரில் இந்த எண்ணை பெற்றுள்ளார். இந்த காரில்தான் அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கார் நம்பர் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications