பிளான் பி.. மெஜாரிட்டி வரலைன்னா என்ன செய்வது? பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. அப்போ திமுக?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 இடங்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
அதே சமயம் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இன்னும் சில கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றன . இன்னும் சிலர் என்டிஏ கூட்டணிக்கே கூட மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் பாஜகவிற்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் 3 கட்ட தேர்தலுக்கு பின் பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்தித்து உள்ளதாகவே கணிப்புகள் கூறுகின்றன.
பாஜக பிளான் பி; 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
அதன்படி பாஜக கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், அதிமுக போன்ற கட்சிகளின் உதவிகளை ஆட்சி அமைக்க பாஜக நாடும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் எம்பிக்கள் இல்லையென்றால் சமயத்தில் திமுகவின் உதவியை கூட பாஜக நாடலாம். உதாரணமாக சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ராடோ தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்களுடன் ஒப்பிட்ட நிலையில் பிரதமர் மோடி திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுவும் கூட காங்கிரஸ் - திமுக கூட்டணியை உடைக்க மோடி விடுத்த அழைப்பாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி எல்லாம் உடைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக தேர்தலுக்கு பின்பாக இவர்களுக்கு இடையே கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் திமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் உதவியை பாஜக ஆட்சி அமைக்க நாடலாம் என்றே கூறப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உதவிகளை கூட பாஜக நாடும் வாய்ப்புகள் உள்ளதாகவே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications