இந்த வருடம் ஓய்வு இல்லை.. ஆனால்.. கேப்டன் மாற்றம்? இதுதான் சிஎஸ்கே தோனியின் பிளான்? கேப்டன் அவரா?
சென்னை: 2024ல் ஐபிஎல் சீசனில் தோனி ஆடுவாரா? அவர் கேப்டனாக நீடிப்பாரா? சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் யார் ? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
2023 ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அடுத்து மும்பை - குஜராத் அணிகளில் ஒன்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.

தோனி என்ன சொன்னார்?:குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் சொன்ன தோனி.. அதை பற்றி எல்லாம் முடிவு செய்ய 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை பற்றி யோசிக்க வேண்டும். இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. அதனால் பார்க்கலாம். விளையாடும் வீரராகவோ அல்லது நிர்வாகியாகவோ சிஎஸ்கே அணியுடன்தான் எப்போதும் இருப்பேன், என்று தோனி கூறியுள்ளார்.
தோனி தனது பேச்சில் சிஎஸ்கே அணியில் நிர்வாகியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார். அணியில் இதனால் தோனி நிர்வாகியாக தொடர போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிராவோ விளக்கம்:இந்த நிலையில் சிஎஸ்கே பவுலிங் டீம் நிர்வாகி/ கோச் பிராவோ அளித்த பேட்டியில், தோனி அடுத்த வருடமும் ஆடுவார். இம்பாக்ட் வீரர் விதி இருக்கும் நிலையில் அவர் கண்டிப்பாக அணியில் தொடர்ந்து ஆடுவார் என்று கூறியுள்ளார்.
இதனால் தோனி அடுத்த வருடம் வெறும் இம்பாக்ட் வீரராக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்போ பிளான் என்ன?:அதாவது தோனி கேப்டன்சி செய்ய மாட்டார். அணியில் இம்பாக்ட் வீரராக பேட்டிங் மட்டும் செய்ய வருவார்.
கேப்டனாக வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இம்பாக்ட் வீரராக இருக்கும் தோனி புதிய கேப்டனுக்கு ஆலோசனைகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இதுவே தோனியின் பிளானாக இருக்கும் என்கிறார்கள் சிஎஸ்கே வட்டாரத்தினர்.
கேப்டன் யார்?:கேப்டன் பதவியை பொறுத்தவரை சிஎஸ்கே அணியிடம் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம்.
முதலில் சிஎஸ்கே அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் என்ற திட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டார். அவரை எதிர்கால கேப்டனாக்கும் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.
இந்த சீசனில் கூட 2 போட்டிகளில்தான் ஆடினார். அவர் பார்மிலும் இல்லை. இன்னும் சிஎஸ்கே செட்டப்பில் முழுமையாக அவர் பொருந்தவில்லை. அதோடு அவருக்கு வயதும் இல்லை.
சிஎஸ்கே கேப்டன் ஆனாலும் கூட அவர் நீண்ட காலம் கேப்டன்சி செய்ய முடியாது. அதோடு அவர் ஐபிஎல்லை விட இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் நபர் என்பதால்.. அடுத்த சீசன்களில் உறுதியாக ஆடுவார் என்பதெல்லாம் சந்தேகம்தான்.

ஜடேஜாவை வைத்து செய்யப்பட்ட கேப்டன்சி முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. ஆனால் ஜடேஜா மீண்டும் கேப்டனாக விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் பெயர் பரிசீலனை செய்யப்படலாம்.
ஜடேஜா மீண்டும் கேப்டனாகாத பட்சத்தில் ருத்துராஜ் கேப்டனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக சையது முஷ்டாக் தொடரில் இவரின் மகாராஷ்டிராவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக கெய்க்வாட்டிற்கு
ஆலோசனை வழங்குவார், கெய்க்வாட்டிற்கு பயிற்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications