விஜயின் பவர் என்ன? மக்கள் சப்போர்ட் எவ்வளவு? எடப்பாடி சுடசுட எடுத்த சர்வே.. கசிந்த தகவல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் அதிமுக - விஜயின் தவெக கூட்டணி விவகாரம்தான் இப்போது ஹாட் டாப்பிக். விஜய் அதிமுக கூட்டணிக்கு போக போகிறாரா? அதிமுக கூட்டணிக்கு வரப்போகும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி தமிழக அரசியலில் தீவிரமாக உலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி அதிமுக சார்பாக பெரிய சர்வே ஒன்று நடத்தப்பட்டு உள்ளதாம்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

vijay tvk tamilaga vetri kazhagam

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக வெற்றிக்கழகம் வருகிறதா?

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பிரதான கட்சிகள் அனைத்தும், கள நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மன நிலை என்ன? என்பதை அறிய தனியார் ஏஜென்சிகள் மூலம் ரகசிய சர்வே எடுத்து பார்க்கின்றனர்.

இந்த சர்வே எடுப்பதன் நோக்கம், தங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதை அறிவது ஒரு புறம் இருந்தாலும், எதிர்க் கட்சிக்கு எந்தளவுக்கு ஆதவும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது தான் பிரதான கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் அதனை பலகீனமாக்கவும், தங்கள் கட்சி மார்ஜினில் வெற்றிவாய்ப்பை இழக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் தான்.

திமுக தரப்பில் ஆய்வு

அந்த வகையில், திமுகவிற்காக, ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பென் நிறுவனம் இயங்கி வருகிறது. அதேபோல, நடிகர் விஜய்யின் த.வெ.க.விற்காக அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு கவனித்து வருகிறது. அதிமுகவை பொறுத்த வரை அக்கட்சியின் முடிவின் படி ஒரு தனியார் நிறுவனம் இந்த வேலையை பார்த்து வருகிறது. அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், தனியாக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் பல்ஸை அறிந்துகொள்கிறார்.

அந்த ஏஜென்சி மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் சர்வே எடுத்துப் பார்க்கிறார் மிதுன். தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் முதல்நாள் வரை மக்களின் மனநிலை மாறக்கூடியது. அதனால், கடைசி கட்டம் வரைக்கும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது முக்கியம் என்பதாலேயே இந்த 3 மாதங்களுக்கு ஒருமுறை என்கிற கான்செப்டுக்குள் நுழைத்துள்ளார் அவர்.

சர்வே ரிசல்ட்

இந்த சர்வே என்பது அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்புப் பற்றி எடுக்கப்படவில்லையாம். மாறாக, விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி மட்டுமே இந்த சர்வே எடுக்கப்பட்டதாம். அந்த சர்வேயின் முடிவிகளில், சீமானின் நாம் தமிழர் கட்சியைப்போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

10-12 சதவிகித வாக்குகள்

இதற்காக 10 முதல் 12 சதவீத வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைக்கிறது. அதேசமயம், ஒரு இடத்தில் கூட வெற்றிக்கான வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. வட தமிழகத்தில் விஜய் போட்டியிட்டால் அவர் மட்டும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் விஜய்யை எதிர்த்து திமுகவும் அதிமுகவும் நேரடியாக வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் விஜய்யின் வெற்றிக் கேள்விக்குறியாகும். மாறாக, விஜய்யை எதித்து திமுகவிலும் அதிமுகவிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார்.

வட தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. சுருக்கமாக, விஜய்யை எதிர்த்து திமுக-அதிமுக வேட்பாளர்கள் களமிறங் கினால் விஜய் தோற்பார்; அதே சமயம் அவரை எதிர்த்து பிரதான கட்சிகளின் தோழமைக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார். ஆக, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் விஜய்க்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர வெற்றி வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்பதாகவே இருக்கிறது என்று அந்த சர்வே ரிசல்ட் சொல்கிறதாம். இந்த முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் மிதுன் காட்டியுள்ளார் என்கின்றனர் மிதுனின் நட்பு வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+