Apple iPhone 17: ஆப்பிள் ஐபோன் 17 மாடல்களின் விலை இந்தியாவில் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: ஆப்பிள் நிறுவனம் நேற்றைய தினம் புதிய ஐபோன் 17 சீரிஸை வெளியிட்டது. இதில் மொத்தம் 4 மாடல்கள் இருக்கிறது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உடன் புதிதாக ஐபோன் 17 ஏர் என்ற மாடலையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஐபோன் மாடல்களின் விலை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
டெக் உலகமே எதிர்பார்க்கும் மிக முக்கியமான நிகழ்வு என்றால் அது ஐபோன் வெளியீட்டு விழா தான். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் தனது புதிய ஐபோன் மாடலை வெளியிடும். அதன்படி இந்தாண்டு நேற்றைய தினம் புதிய ஐபோன் மாடல்கள் வெளியிடப்பட்டது. இது ஆப்பிள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

இந்தியாவில் விலை
நேற்றைய தினம் முதலில் அமெரிக்காவில் ஐபோன் விலை குறித்த தகவல்கள் மட்டுமே வெளியானது. இதற்கிடையே இந்தியாவில் ஐபோன் 17 மாடல்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐபோன் 17
வழக்கமான ஐபோன் 17 மாடல் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வெளியாகிறது. அதில் அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட்டான 256 ஜிபி மாடல் விலை ரூ.82,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,02,900ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 17 (256 ஜிபி)- ரூ.82,900
ஐபோன் 17 (512 ஜிபி)- ரூ.1,02,900
ஐபோன் 17 ப்ரோ
ஐபோன் 17 ப்ரோ மாடலை பொறுத்தவரை அடிப்படை ஸ்டோரேஜ் ஆன 256 ஜிபி மாடல் விலை ரூ.1,34,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 512 ஜிபி மாடல் விலை ரூ.1,54,900க்கு விற்பனை செய்யப்படும். ஐபோன் 17 ப்ரோவில் கூடுதலாக 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்டும் இருக்கிறது. அதன் விலை ரூ.1,74,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ 256GB- ₹1,34,900
ஐபோன் 17 ப்ரோ 512GB- ₹1,54,900
ஐபோன் 17 ப்ரோ 1TB- ₹1,74,900
ஐபோன் ஏர்
இந்தாண்டு ஐபோன் மாடல்களில் புதிதாக ஐபோன் ஏர் மாடலையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் மெல்லிதாக வெறும் 5.6 மிமீ மட்டும் தடிமன் கொண்டதாக இந்த ஐபோன் ஏர் இருக்கிறது. செல்போன் மெல்லியதாக இருந்தாலும் மற்ற வசதிகளில் எந்தவொரு சமரசத்தையும் ஆப்பிள் செய்யவில்லை. அதேநேரம் இதன் ஐபோன் ப்ரோ மாடலை விடவும் அதிகமாகவே இருக்கிறது.
ஐபோன் 17 ஏர் 256GB- ₹1,19,900
ஐபோன் 17 ஏர் 512GB- ₹1,39,900
ஐபோன் 17 ஏர் 1TB- ₹1,59,900
ஐபோன் ப்ரோ மேக்ஸ்
ஐபோனின் அதிக விலை மாடல் என்றால் அது ஐபோன் ப்ரோ மேக்ஸ் தான். அட்டகாசமான வசதிகளுடன் பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரியை கொண்டதாக ஐபோன் 17 மேக்ஸ் இருக்கிறது. இந்த ஐபோன் 17 மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலையே ரூ.1.49 லட்சமாக இருக்கிறது. அதன் டாப் வேரியண்ட் விலை ரூ.2 லட்சத்தையும் கூட தாண்டுகிறது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256GB- ₹1,49,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 512GB- ₹1,69,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 1TB- ₹1,89,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 2TB- ₹2,29,900
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications