ப்பா.. இவ்வளவு லட்சமா! சூர்யாவிற்கு கமல் தந்த ரோலக்ஸ் வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? ஆடி போயிடுவீங்க
சென்னை: நடிகர் சூர்யாவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாங்கி கொடுத்து இருக்கும் ரோலக்ஸ் வாட்ச் இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராமன் என்று பெரிய பட்டாளமே நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்தான் விக்ரம்.
பழைய விக்ரம் படத்தின் சில லைன், கைதி கனெக்சன், கிளைமேக்சில் சூர்யா என்ட்ரி என்று இந்த படத்தில் பல பல சுவாரசிய சம்பவங்கள் இடம் பெற்று இருந்தன.

கார்
விக்ரம் படம் வெளியாகி ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. விரைவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வசூல் 1000 கோடி ரூபாயை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிலையில்தான் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
Recommended Video

ரோலக்ஸ்
'Lexus ES300h' காரின் லக்ஸரி மாடலை அவர் லோகேஷுக்கு வாங்கி கொடுத்தார். இதன் ஆன் ரோட் விலை 85 லட்சம் ரூபாய் வரை வரும். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தற்போது படத்தில் கிளைமேக்சில் வந்த சூர்யாவிற்கு ரோலஸ் வாட்ச் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். சூர்யாவை நேரில் சந்தித்து இந்த வாட்சை பரிசளித்துள்ளார். Rolex Day-date 40mm Rose Gold Sun Dust Diamond Dial மாடல் வாட்ச் ஆகும் இது.

மதிப்பு என்ன?
இந்த வாட்சின் இந்திய மதிப்பு 55 லட்சம் ரூபாய் வரை வரும். ரோஸ் கோல்டு மூலம் உருவாக்கப்பட்ட வாட்ச் ஆகும் இது. பிரேஸ்லெட்டும் ரோஸ் கோல்டு மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். 10 ATM தண்ணீர் அளவு தாங்கும் திறன் கொண்டது இந்த வாட்ச் ஆகும். உள்ள முற்களும் ரோஸ் கோல்டு மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். 1956ல் உருவாக்கப்பட்ட இந்த மாடல் வாட்ச், முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்டது.

ஏன் இந்த வாட்ச்
உலகின் விலை உயர்ந்த வாட்சுகளில் இதுவும் ஒன்று ஆகும். பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் விரும்பும் வாட்சுகளில் இதுவும் ஒன்று. அதில் இந்த ரோஸ் கோல்டு மாடல் இப்போது பலரால் விரும்பப்படும் டிரெண்டிங்கில் இருக்கும் வாட்ச் ஆகும். இதைத்தான் கமல்ஹாசன் சூர்யாவிற்கு வாங்கிக்கொடுத்துள்ளார். இந்த படத்தில் சூர்யா பெயர் ரோலக்ஸ் என்பதால், அதே நிறுவன வாட்சை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications