நாமக்கல்லிலேயே கறிக் கோழி விலை கிடுகிடு! அதுவும் ஒரே வாரத்தில்! அப்போ மட்டன், மீன் விலையெல்லாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழிக்கறியின் விலை இன்றைய தினம் ரூ 8 உயர்ந்து உயிருடன் கோழி, கிலோவுக்கு ரூ 127 க்கு விற்பனையாகிறது.

ஞாயிற்றுக்கிழமை என்றால் கோழிக்குழம்பு வீடுகளில் கொதிக்காமல் இருக்காது. சிலர் இந்த கோழியை வைத்து பிரியாணி, ஃபிரை, சிக்கன் மசாலா, சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை தயார் செய்வர்.

What is the price of the chicken in Namakkal

சிலருக்கு தினந்தோறும் ஞாயிற்றுக்கிழமையா இருக்கக் கூடாதா என்றெல்லாம் ஏங்குவது உண்டு. இதெல்லாம் நடக்கிற கதையா? அப்படின்னு மனதை தேற்றிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.

எனவே ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் கறிக் கடைகளில் நீண்ட கூட்டம் நின்றுக் கொண்டிருக்கும். கோழி, மட்டன் உள்ளிட்ட கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சிட்டாட்டம் பறந்து வந்து சாப்பிடுவதற்காக வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் சிக்கனை வாசனை பிடித்தபடியே இருப்பர். தற்போது அக்னி வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நேரத்தில் தயிர் சாதம், கூழ், கஞ்சி, பழைய சோறு இவையே தேவாமிர்தம் போல் இருக்கும். ஆனாலும் சிக்கன் சாப்பிடாவிட்டால் வாழ்க்கையே முடிந்தது போல் எண்ணும் சிலர் இந்த வெயில் காலத்திலும் போய் சிக்கன் வாங்கி வருகிறார்கள். மருத்துவர்களும் சிக்கன் உள்ளிட்ட அசைவை உணவுகளை உண்பதை இந்த கோடையில் தவிருங்கள் என்கிறார்கள்.

ஆனாலும் யாரும் கேட்பது போல் தெரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் சிக்கன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கறிக்கோழி உயிருடன் கிலோ ரூ 119 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ஒரே வாரத்தில் ரூ 8 உயர்ந்து கிலோ ரூ 127 க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ரூ 250- 280 வரை விற்பனையாகிறது. சென்னையில் போன்லஸ் சிக்கன் கிலோ ரூ 210 க்கும் நாட்டுக் கோழி கிலோ ரூ 360 க்கும் விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை ரூ5.50க்கு விற்பனையாகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை தலா 20 காசுகள் வீதம் தலா 60 காசுகள் உயர்ந்து ரூ 5.50 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆட்டிறைச்சியின் விலை அதாவது எலும்பு இல்லாதது கிலோவுக்கு ரூ 750 க்கு விற்பனையாகிறது. எலும்புடன் கிலோ ரூ 600 க்கு விற்பனையாகிறது. தற்போது மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் படி நெத்திலி மீன் கிலோ 150 ரூபாய், வஞ்சிரம் கிலோ ரூ 700, வவ்வால் மீன் ரூ 600, சங்கரா கிலோ ரூ 175, இறால் கிலோ ரூ 300க்கும் சீலா மீன் கிலோ ரூ 350 க்கும் விற்பனையாகிறது.

(கறிக்கோழி விலையில் ஒவ்வொரு நகரத்திற்கும் விலை மாறுபடும். கிடைத்த தகவலை அடிப்படையாக கொண்டு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் நேரில் விசாரித்து வாங்குவது சிறப்பு!)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+