Vijay attire: மலேசியா போறப்ப விஜய் போட்டிருந்த நீல நிற Jacket-ன் விலை எவ்வளவு தெரியுமா? யம்மாடியோவ்!
சென்னை: மலேசியாவில் நடக்கும் "ஜனநாயகன்" இசை வெளியீட்டு விழாவுக்காக சென்றுள்ள விஜய் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை என்ன என்பது தெரியுமா? அந்த ஜாக்கெட்டின் பிராண்ட், விலையை தேடும் ரசிகர்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" எனும் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் ஆகும். இதனால் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் பேசப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆளும் கட்சியை விமர்சித்து சில காட்சிகள் இடம் பெறலாம் என்றும் படத்தின் மைய கருத்தே ஆளும் கட்சியை பற்றியதுதான் என்றும் கூறுகிறார்கள். படத்தின் கதை என்ன என்பது ஜனவரி 9ஆம் தேதிதான் தெரியவரும்.
இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் தனி விமானம் மூலம் நேற்றே மலேசியா புறப்பட்டார். அப்போது அவர் கருநீல நிறத்தில் ஒரு சர்ட் அணிந்து கொண்டு அதனுள்ளே அதே நிறத்தில் கழுத்து வரையிலான பனியனையும் அணிந்திருந்தார்.
அந்த சர்ட்டின் உள்பக்கம் சற்று வேறு நிறத்தில் இருந்தது. விஜய் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு சென்றது பலரையும் கவர்ந்தது. மேலும் அவர் அணிந்திருந்த சர்ட் குறித்து நெட்டிசன்கள் தேடியுள்ளனர்.
அப்போதுதான் அந்த ஸ்டைலான நீல நிற ஜாக்கெட் GIORGIO ARMAN-ன் BLUE DENIM Jacket-ன் விலை ரூ 1,24,490 என தெரியவந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஒன்றரை லட்சத்தில் ஜாக்கெட்டா என வாயை பிளந்து பார்க்கிறார்கள்.
மலேசியா சென்ற விஜய்க்கு தத்தோ மாலிக் பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. அது போல் அவருக்கு அங்கு கூடிய ரசிகர்களும் சிறப்பான வரவேற்பளித்தனர். ரசிகர்களை கண்டு விஜய் கையசைத்தார்.
விஜய்யுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோரும் மலேசியா சென்றுள்ளனர். இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்டோரும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பர் என தெரிகிறது. இந்த விழாவில் பிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் விமான டிக்கெட் புக் செய்து கொண்டு மலேசியா சென்றுவிட்டனர். இதனால் மலேசியாவே விழாக்கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications