கிரேட் எஸ்கேப்! காவிரி குறித்து வந்து விழுந்த கேள்வி.. ஷாக்கான நடிகர் ரஜினிகாந்த்! ரியாக்சனை பாருங்க
சென்னை: தமிழகத்துக்கான தண்ணீரை காவிரி ஆற்றிலிருந்து கர்நாடகா தர மறுக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன் பற்றிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும், நமக்கும் காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை உறுதி செய்வதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா திறந்து விடும் தண்ணீரை கண்காணிக்கும். அவ்வப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டமும் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை என கூறியது.
இதையடுத்து கர்நாடகா தரப்பில், போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் நீர் திறக்க முடியவில்லை என கூறப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தமிழகத்துக்கான தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதனை கர்நாடகா பின்பற்றவில்லை. இதற்கிடையே கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.
இந்த கூட்டத்துக்கு பிறகு முதல்வர் சித்தராமைா, ‛‛போதிய மழை இன்மையால் தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது. கர்நாடகாவில் ஆகஸ்ட் மாத மழை அளவு குறைந்துள்ளது. இதுபற்றி உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் எடுத்து வைப்போம். அணை நீர் இருப்பை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அனுப்ப கோரிக்கை வைப்போம்'' என்றார்.
இதற்கிடையே தான் தமிழக அரசு சார்பில் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி விவகாரம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது ரஜினிகாந்திடம் இன்று காலையில் பத்திரிகையாளர்கள், ‛‛லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளீர்கள். அந்த படம் எப்படி வரும் சார்?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் நான் லைகாவுக்காக ஞானவேல் ராஜூடன் இணைந்துள்ளேன். இதனால் வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும். உறுதியாக நல்லா இருக்கும். தேங்க் யூ'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கர்நாடகா காவிரியிலிருந்து தமிழகத்துக்கான தண்ணீரை தர மறுக்கிறது?'' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டதோடு, தேங்க் யூ.. தேங்க்யூ என கூறியபடி காரில் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவிடம், ‛‛காவிரி விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறுவாரா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‛‛நடிகர் ரஜினிகாந்த் அதுபற்றி கருத்து தெரிவிக்கமாட்டார். அதற்கு தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ












Click it and Unblock the Notifications