நந்தி மலையில் தொடங்கும் தென்பெண்ணை.. "தமிழகம் vs கர்நாடகா.." மற்றொரு நீண்ட சட்ட போராட்ட வரலாறு
சென்னை: தமிழ்நாட்டிற்கும் கர்நாடகா மாநிலத்திற்கும் காவிரியைப் போலவே தென்பெண்ணை நதி நீரைப் பகிர்வதிலும் பிரச்சனை இருக்கிறது. தென்பெண்ணை துணை நதி ஒன்றில் கர்நாடகா அணை கட்டியதே இதற்குக் காரணமாகும். காவிரி பிரச்சனை குறித்து பலருக்கும் தெரியும். ஆனால் இந்த தென்பெண்ணை பிரச்சனை பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீரைப் போலவே தென்பெண்ணை நதியின் நீர் தொடர்பாகவும் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

எங்கு உருவாகிறது
தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தின் சிக்கபள்ளாப்பூர் (Chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி மலைத் தொடரின் அமைந்துள்ள சென்னகேசவா மலை (Chenna Kesava hills) உற்பத்தியாகிறது. தென்பெண்ணை ஆற்றை கர்நாடகாவில் "தட்சிண பினாகினி" என்று அழைக்கிறார்கள். இந்த ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் வழியாகச் சுமார் 432 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.
முதலில் நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த மலைத்தொடர் இந்த ஆறு கர்நாடகாவில் 112 கிமீ பாய்கிறது. பிறகு அது கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகத் தமிழகத்தில் நுழைகிறது. பின்னர் தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக அந்த நதி பாய்கிறது.. தமிழகத்தில் மட்டும் இந்த நதி மொத்தம் 318 கிமீ தூரம் பாய்கிறது. இறுதியாக கடலூரில் தென்பெண்ணை ஆறு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த ஆறுதான் வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணை மற்றும் சாத்தனூர் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிக முக்கியமான அணைகளாகும்.
குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைத் தாண்டி, இந்த ஆற்றின் கிளை நதிகளான சினையாறு, பாம்பாறு மற்றும் மார்க்கண்டேய நதி ஆகியவையும் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும். பெரும்பாலும் இந்த நதி விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை விளங்குகிறது.

சிக்கல் என்ன
இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்டகாலச் சிக்கல் நிலவி வருகிறது. தென் பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டியதே இரு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் சிக்கலுக்குப் பிரதானக் காரணமாகும்.
1892ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தின் அனுமதியின்றி மாநிலமான கர்நாடகா புதிய அணைகளையோ அல்லது நீரைத் திசைதிருப்பும் கட்டுமானங்களையோ கட்டக்கூடாது. 1892 ஒப்பந்தம் இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறி மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணையைக் கட்டியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பது தமிழகத்தின் வாதமாக இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவு
கடந்த 2018ல் தமிழ்நாடு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் காவிரி விவகாரத்தைப் போலவே, தென்பெண்ணை நதியின் பிரச்சினையை கையா தனியாக ஒரு 'நதிநீர் தீர்ப்பாயம்' (River Water Tribunal) அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்து. அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications