370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
சென்னை: பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் தென்னிந்தியாவில் மட்டும் பாஜக சின்னங்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகின்றன,
தமிழ்நாடு - 19
கேரளா - 18
தெலுங்கானா - 13
ஆந்திரா - 06
பஞ்சாப் - 13
உத்தரகாண்ட்- 02
வடகிழக்கு- 02
மேற்கு வங்கம்- 16
பாஜகவின் இந்த 90 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு கடுமையான போட்டியே நிலவும். இதில் கர்நாடக தவிர மற்ற இடங்களில் பாஜகவிற்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த 90ல் பாஜக 20- 25 இடங்களில் வென்றால் கூட மீதமுள்ள 373 இடங்களில் அப்படியே பாஜக தனியாக வெல்வது என்பதற்கு நம்பர்ஸ் ரீதியாக வாய்ப்பு குறைவு.
373ல் 370ல் எப்படி பாஜகவினரால் வெற்றி பெற முடியும்?
குஜராத், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக க்ளீன் ஸ்வீப் அல்லது கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் செய்தது. இந்த முறை ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக கடுமையான சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ராஜஸ்தானில் 25 இடங்களிலும் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தல் இந்த முறை பாஜகவிற்கு பெரும் சோதனையாக இருக்கும், போட்டியாக இதில் சில மாநிலங்களில் இருக்கும்.
கடந்த முறை மகாராஷ்டிராவில், 48 இடங்களில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது, சிவசேனாவையும் என்சிபியையும் பிளவுபடுத்தியும் கூட அங்கே எதிர்க்கட்சி கூட்டணி வலுவாக இருக்கிறது. அப்படி இருக்க கடந்த முறை வென்றதன் விட பாஜக கூடுதலாக 67 இடங்களை வெல்வது சந்தேகம்தான். பாஜகவின் வெற்றி உறுதியாக இருப்பதாக கணிப்புகள் சொன்னாலும் 370 இடங்களை பெற்று வெல்லுமா என்பது விவாதமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications