அதெல்லாம் சரி.. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் உதயநிதி பெயரை சொன்னது ஏன்? இப்படி ஒரு காரணமா?
சென்னை: நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பெரும்பாலானோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினர். அவர்களின் பேச்சுக்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவி ஏற்ற திமுக எம்பிக்கள், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என என்று முழக்கமிட்டனர்..

முழக்கம்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. கடந்த இரண்டு நாட்களாக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்று வருகின்றனர்.
நேற்று மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். வடமாநில எம்பிக்கள் இந்தியில் பதவி ஏற்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்தனர்.
முக்கியமாக, திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார். திமுக எம்பிக்கள் பெரும்பாலும் வருங்காலம் எங்கள் உதயநிதி என முழக்கமிட்டனர்.
உதயநிதி முழக்கம்; கடந்த முறை திமுக எம்பிக்கள் வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர், என்று முழக்கமிட்டனர். இந்த முறை கூடுதலாக வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார். வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி - பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் திமுக எம்பி அண்ணாதுரை. திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில்.
மேலும், திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார் . ஆரணி எம்பி தரணிவேந்தன், கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்.
தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எந்த முழக்கமும் எழுப்பவில்லை , ஆனால் சட்டைப்பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை சபையில் எடுத்து காட்டினார். முரசொலி எம்பி தமிழில் பதவியேற்றார். அப்போது கருணாநிதி- ஸ்டாலின்- உதயநிதி வாழ்க என்றார். காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்.
என்ன காரணம்?: திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட உள்ள ப்ரோமோஷன்தான்.. அவரின் கட்டுப்பாட்டிற்குள் கட்சி செல்ல போவதன் அறிகுறிதான் நேற்றைய பாராட்டு பத்திரம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்ச அந்த கட்சி முடிவு செய்துள்ளதாம் . முக்கியமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை எடுத்து வருகிறாராம்.
திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.
2. நன்றாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை வைத்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி புதிதாக இவர்களில் சிலரை மாவட்ட செயலாளர்களாக களமிறக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
3. அதேபோல் அமைச்சர்களாக பணியாற்றாதவர்கள், சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் லிஸ்டையும் எடுத்துள்ளார். இந்த லிஸ்டை வைத்து அதிலும் சில மாற்றங்களை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் முக்கிய ப்ரோமோஷன்: உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அமைச்சர் பதவியில் இருந்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
பெரும்பாலும் அடுத்த சில நாட்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
2. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
3. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications