கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு காரணம் ஜோசியமா? வாயை விட்ட நிர்மல் குமார்.. ஆதாரத்தோடு விளாசிய திமுக
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மஞ்சள் துண்டு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் நிர்மல் குமாரின் பேச்சுக்கு ஆதாரத்தோடு திமுக தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
நேற்று முதல்நாள் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, வீட்டு வசதி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் ஆதாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தின் போது முதல்வர் விஜய் பேசிய கருத்துக்கள் விவாதம் ஆகி உள்ளது.

இந்த விவாதத்தின் பேசிய முதல்வர் விஜய், "நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசும்போதே, மூன்று துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அது வெறும் மேடைப் பேச்சுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தை அல்ல. கூறப்படும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய வலுவான ஆதாரங்கள் அரசிடம் உள்ளன. அந்தக் கோப்புகளைத் திறக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள். சரியான நேரத்தில், உரிய தகவல்கள் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தப்படும். மக்களுக்கு எதை, எப்போது, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் என்னை இந்த இடத்தில் அமர வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
பதிலடி தந்த உதயநிதி
இன்று தமிழக சட்டசபையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார், அதில், இந்த அவையை முடிந்த அளவுக்கு சபாநாயகர் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார், எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை முடிந்த அளவுக்கு கொடுக்கிறீர்கள்.
அதே சமயம்.. நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் தன்னுடைய மேசையில் 3 ஆவணங்கள் இருப்பதாகவும், அதை திறக்க வைத்துவிடாதீர்கள் எனவும் எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் கூறியிருந்தார். தயவு செய்து முதல்வர் அந்த ஃபைல்களை திறந்து பார்க்க வேண்டும். அதன் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதற்காக பயப்படுகிறீர்கள், எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள். இதையே 3 மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா. நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்..
— DMK IT WING (@DMKITwing) August 21, 2026
இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே… pic.twitter.com/jdN16J62Ix
நிர்மல் குமார் பதிலடி
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளிக்கையில், ஜோசியக்காரர்கள் சொல்லி மஞ்சள் துண்டு போட்ட கதை எல்லாம் நாங்கள் வரலாற்றில் பார்த்து இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.
நிர்மல் குமாருக்கு பதிலடி
இதற்கு திமுக ஐடி விங் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. அதில் , ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்..
இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே தலைவர் கலைஞர் அவர்கள் விளக்கம் கொடுத்துவிட்டார்..
எனவே குட்டை மனம் படைத்த நிர்மல் குமார் இனிமேலாவது அமைச்சர் பதவிக்கு உரிய வகையில் நடந்துகொண்டால் நல்லது!, என்றுள்ளனர்.
மேலும் இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதம் ஒன்றையும் இந்த போஸ்டில் ஆதாரமாக வெளியிட்டு உள்ளனர். அதில், மஞ்சள் துண்டு, தெய்வீக மகத்துவத்திற்கா?
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.
வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர்.
அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு - மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர். அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் கழகக் கண்மணிகள்!
கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார். அப்படிக் கம்பளிச் சால்யை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர். அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது. தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.
அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைபோல சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை. அன்புள்ள, மு. கருணாநிதி என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பழைய கடிதத்தை வெளியிட்டு திமுக பதிலடி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
