விஜய் மீது திடீரென அண்ணாமலை கோபப்பட.. இப்படி ஒரு காரணமா? அப்படி என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மீது சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனங்களை வைத்தார். இந்த விமர்சனத்திற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவிற்கு இது தொடர்பாக சில அரசியல் வல்லுனர்கள் முக்கியமான ஆலோசனைகளை வழங்கி உள்ளார்களாம். அதில், தமிழக வெற்றிக் கழகம் செய்ய கூடிய அரசியல்.. திமுகவை எதிர்ப்பது போல இருந்தாலும் திமுகவிற்குத்தான் சாதகம். திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறார்.

Annamalai Vijay

திமுக டாஸ்மாக் ஊழல் புகாரில்.. திமுகவை திட்டுவதோடு பாஜகவை சேர்ந்து திட்டுகிறார். இதன் மூலம் திமுகவின் பி டீம் போல அதிகாரபூர்வமற்ற முறையில் செயல்படுகிறார். அதோடு பாஜக - திமுகவோடு சேர்ந்து நாடகம் ஆடுகிறது என்றெல்லாம் சொல்கிறார்.. என்று சில அரசியல் வல்லுனர்கள் பாஜகவிற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

கூட்டணி

அதோடு திமுகவை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டு அதிமுகவை பாஜக கூட்டணியில் சேர விடாமல் தடுக்கிறார். விஜய் இருக்கிற வரை அதிமுக பாஜக பக்கம் வர யோசிக்கும். இதன் மூலம் என்டிஏ கூட்டணி உருவாகாமல் விஜய் மறைமுகமாக தடுக்கிறார். அதோடு விஜய் அதிமுகவை தங்கள் பக்கம் இழுத்து பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்த நினைக்கிறார் என்றும் சில அரசியல் வல்லுனர்கள் பாஜகவிற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அண்ணாமலை கோபம்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் செய்யப்பட்டதாக நேற்று முதல்நாள் பாஜக போராட திட்டமிட்டு இருந்தது. இதையடுத்து அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதை தமிழக வெற்றிக் கழகம் கிண்டல் செய்து இருந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். பாஜக போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், பாஜக நாடகமாடுவதை விட்டுவிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் களத்திற்கு வர சொல்லுங்க.. ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செஞ்சுட்டு இருக்காங்க. சினிமா சூட்டிங்கில் இருந்து அரசியல் செய்வாங்களா.. சினிமா சூட்டிங்கில் இருந்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். திரும்ப எனக்கும் பேசத் தெரியும். தவெகவும் ஒரு லிமிட்டை கிராஸ் செய்யக்கூடாது.

நானும் தமிழக வெற்றிக் கழகத்தை மரியாதையாக தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அறிக்கை விடும் போது அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன விஜய் மாதிரி டேன்ஸ் ஆடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா.. நான் களத்தில் இருந்து போராடிக்கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறேன். இது என்ன வொர்க் பிரம் ஹோம் அரசியலா செய்கிறார்., என்று கிண்டலடித்து இருந்தார்.

விஜயின் செயல்கள் காரணமாக அப்செட் ஆன பின்பே.. பாஜகவிற்கு இது தொடர்பாக சில அரசியல் வல்லுனர்கள் முக்கியமான ஆலோசனைகளை வழங்கிய பின்பே.. அண்ணாமலை விஜயை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+