இரண்டில் ஒன்று நடக்க போகுது..டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை.. அப்போ அதிமுக? அல்லு சில்லு பறக்குமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்லப்படும் நிலையில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் டெல்லிக்கு செல்கிறார் என்பதை விட டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூற வேண்டும் என்கிறார்கள்.. பாஜகவிற்கு நெருக்கமான அரசியல் வட்டாரத்தினர்.

அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளார் அண்ணாமலை. நேற்று முதல்நாள் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை கருத்து

அண்ணாமலை கருத்து

நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

குனிய முடியாது

குனிய முடியாது

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலையின் இந்த பேச்சு காரணமாக அதிமுக நிர்வாகிகள் பலர் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். அண்ணாமலை இப்படி வெளிப்படையாக கட்சி கூட்டத்தில் பேசி இருக்க கூடாது. அவரின் பேச்சு அதிமுகவிற்கு எதிராக இருக்கிறது. அவருக்கு கூட்டணி வேண்டாம் என்றால் எங்களுக்கும் கூட்டணி வேண்டாம். பாஜகவின் கூட்டணிக்காக நாங்கள் ஒன்றும் ஏங்கி நிற்கவில்லை என்று கூறி வருகின்றனர் அதிமுகவினர். அதாவது பாஜக போனால் போகட்டும் என்ற நிலைக்கு அதிமுக தலைகள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை டெல்லி

அண்ணாமலை டெல்லி

இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரின் டெல்லி பயணம் பல்வேறு விஷயங்களுக்காக கவனம் பெறுகிறது . வரும் வரும் 26-ம்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் பற்றி அவர் ஆலோசனை செய்ய செல்வதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனாலும் உட்கட்சி விவகாரம், அதிமுக - பாஜக மோதல், கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றியே அண்ணாமலை பேச போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அழைக்கப்பட்டார்

அழைக்கப்பட்டார்

கட்சியில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை வைத்து.. அவர் செல்கிறார் என்று சொல்வதை விட அழைக்கப்பட்டார் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்கிறார்கள் சீனியர் பாஜக நிர்வாகிகள். டெல்லியில் சிலர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அண்ணாமலையின் இந்த பயணத்திற்கு பின் அதிமுக - பாஜக உறவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். அது கூட்டணிக்கு ஆதரவானதா எதிரானதா என்று தெரியாது. ஆனால் இந்த பயணத்திற்கு பின் அதிமுக - பாஜக மோதலில் ஒரு தெளிவு கிடைக்கும். பல அதிரடி விஷயங்கள் இந்த பயணத்திற்கு பின் நடக்கும் என்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+