திமுகவின் ஆணிவேரில் கைவைக்கும் "டெல்லி".. அடுத்தடுத்து ரெய்டு நடப்பது ஏன்? காரணமே வேறயாமே!
சென்னை: திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டுகள் நடக்கிறது. இந்த ரெய்டுக்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது.இந்தியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் கட்டமைக்க முயற்சி செய்வதால் கோபம் , என்று அவர் கூறியுள்ளார்.
ரெய்டு காரணம் என்ன?: இந்த ரெய்டுக்கு பின் திமுகவின் அஸ்திவாரம் கைவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக தேர்தல் நேரங்களில் செலவு செய்ய பணம் தேவை. அதேபோல் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் பணிகளை செய்ய பணம் தேவை. திமுகவின் நிதி ஆதாரமாக இருக்கும் தொழில் அதிபர்கள், மணல் விற்பனையாளர்கள் ஆகியோர்கள் இப்போது குறி வைக்கப்படுவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அமலாக்கத்துறை அடிக்கடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன்பின் மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இது எல்லாமே திமுகவின் நிதி ஆதாரங்கள், தேர்தல் பணிகளை செய்யும் நபர்களை குறி வைத்து நடத்தப்பட்டது போல இருந்தது. அந்த வகையில்தான் சமீபத்தில் கூட பணக்கார எம்பிக்களில் ஒருவரான ஜெகத்ரட்சகன் ரெய்டுக்கு உள்ளானார்.
அந்த வகையில்தான் ஜெகத்ரட்சகன் குறி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக எம்பியான ஜெகத்ரட்சகன்.. அரசியல் தாண்டி பல்வேறு தொழில்களை செய்து வரும் தொழிலதிபர். இந்த நிலையில்தான் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அவருக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.
முக்கிய காரணம்: தற்போது அதே வகையில்தான் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இது எல்லாமே திமுகவின் நிதி ஆதாரங்கள், தேர்தல் பணிகளை செய்யும் நபர்களை குறி வைத்து நடத்தப்பட்டது போல இருந்தது. அதாவது தேர்தல் நேரத்தில் அவர்களின் நிதி ஆதாரங்களை முடக்கும் விதமாக ரெய்டு நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை ஊழல் கட்சி என்று பிம்பம் செய்யவும், ரெய்டுகளின் பெயரால் பொதுவான நிதியை கூட பயன்படுத்த முடியாமல் முடக்கி வைப்பதும் நோக்கம் என்று கூறப்படுகிறது. அதன்படியே இன்று சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, ரவி என்பவரின் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அதேபோல் ரியல்எஸ்டேட் உரிமையாளர் அப்பாசாமியின் மகன் ரவி தான், ரெசிடென்சி ஓட்டலின் உரிமையாளர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள மீனா ஜெயக்குமார் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கிறது. திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகியான மீனா ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications