விஜய்க்கு எதிராக கடும் கோபத்தில் திமுக.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் மீது திமுகவினர் அடுத்தடுத்து எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். கட்சி கொடி அறிமுகம் செய்த பின்னர் திமுகவினர் பலர் சமூக வலைதளங்களில் கொடியையும், அவரையும் அதிக அளவில் விமர்சித்தனர். அதேபோல் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினருமே விஜய்யின் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள காரணம் பற்றி பார்ப்போம்.
நடிகர் விஜய் அரசியல் வருகை தமிழக அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெரியவில்லை.. அதேநேரம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த போதும் சரி, அவர் அண்மையில் கட்சி கொடி அறிமுகம் செய்த போதும் சரி, அதிமுக, பாஜகவைவிட கடுமையான எதிர்வினை ஆற்றிய கட்சி என்றால் அது திமுக தான்.

இளம் தலைமுறையினரின் வாக்குகளை குறிவைத்து களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். புகழின் உச்சியில் இருக்கும் போதே அரசியலில் ஆரம்பித்துள்ளார். இது அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், இது திராவிட கட்சிகளுக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
2006ல் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய திமுக மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி கட்சிகளின் ஆட்சியை நடத்த வேண்டிய நிலைக்கு காரணம் அன்று விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தான். விஜயகாந்த் கட்சியினர் வாங்கிய வாக்குகள் தான், அதிமுகவின் தோல்விக்கும், திமுக மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கு காரணம் ஆகும். அதே பாணியில் விஜய்யின் கட்சியும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறும் அரசியல் நிபுணர்கள், 2026ஐ பொறுத்தவரை எளிதாக வெல்ல நினைக்கும் திமுகவுக்கு நிச்சயம் விஜய்யின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.
அதிமுக, பாஜக தனித்து போட்டியிட்டது, கூட்டணி பலம், மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் போன்ற காரணங்களால் தோற்கடிக்க யாருமே இல்லை என்கிற அளவிற்கு திமுக 2024 லோக்சபா தேர்தலில் வலுவாக இருந்தது. இதன் காரணமாகவே இதுவரை போட்டியிட யோசித்த தேனி, கோவையில் கூட போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் 2026ல் திமுக நிச்சயம் வித்தியாசமான சூழலை சந்திக்கும் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், விஜய் அரசியல் வருகையால், இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் விஜய்யை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதேபோல் விஜய் தனித்து போட்டியிட்டாலும், அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அது திமுகவையே பாதிக்கும் என்கிறார்கள்.
திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள பலர் விஜய்க்கு ரசிகர்களாக இருப்பதாக கூறும் அரசியல் நிபுணர்கள், தமிழகத்தில் வார்டு வாரியாக, கிராமங்கள் வரை விஜய்க்கு ரசிகர்கள் பலம் இருப்பதால்,அது 2026ல் வாக்காக மாறினால், அது திமுக, அதிமுகவிற்கு நிச்சயம் சிக்கலாகும் என்கிறார்கள். இதுதவிர திமுக, அதிமுகவிற்கு மாற்று வேண்டும் என்று நினைப்போரும், 2கே கிட்ஸ் வாக்காளர்கள் பலரும், இதேபோல் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பலரும், 2026ல் எப்படி வாக்களிக்க போகிறார்கள் என்று தெரியாது. அது விஜய்க்கு சாதகமாக மாறும் பட்சத்தில் வரும் காலத்தில் திமுகவிற்கு சவாலாக மாறும் என்கிறார்கள். இந்த சூழலில் திமுகவினர் பலர் விஜய்க்கு எதிராக கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். திமுக தலைவர்களுமே பலர் தற்போது விஜய்யை விமர்சித்து வருகிறார்கள் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications